மேற்கு வங்க தேர்தல்: குண்டுவீச்சு, உயிரிழப்பால் பதற்றம்

மேற்கு வங்க தேர்தல்: குண்டுவீச்சு, உயிரிழப்பால் பதற்றம்

1 mins read
104d48b8-9d74-4006-a57a-3f21e3255685
வாக்களிப்பு மையங்களில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்களிப்பு நிலையம் ஒன்றில் இன்று குண்டுகள் வீசப்பட்டன. கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையால் ஒருவர் உயிரிழந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தை ஆட்சி செய்து வரும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டி ஆட்சியைப் பிடிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி விழைகிறது.

வாக்களிப்பு நிலையத்தில் கும்பல் ஒன்று குண்டுகளை வீசியதாக போலிசார் தெரிவித்தனர். இத்தாக்குதல் காரணமாக போலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலை திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலில் தமது கட்சியின் ஆதரவாளர் ஒருவர் மாண்டதாக மேற்கு வங்க மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திலீப் கோஷ் தெரிவித்தார்.