மியன்மாரில் தொடரும் துப்பாக்கிச்சூடு

மியன்மாரின் பல பகுதிகளில் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக ‘மியன்மார் நாவ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் இரண்டாவது ஆகப்பெரிய நகரமான மாண்டலேயில் 13 பேரும் வணிகத் தலைநகர் யங்கூனில் எழுவரும் கொல்லப்பட்டதாக அந்நிறுவனம் கூறியது.

மியன்மார் ராணுவத் தலைவர்கள் நேற்று ஆயுதப் படை தினத்தைக் கொண்டாடிய வேளையில் ஆர்ப்பாட்டக்காரர்களின் “தலையிலும் முதுகிலும்” துப்பாக்கிச்சூடு நடத்தப்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து யங்கூன், மாண்டலே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் திரண்டனர்.

“இன்றைய (நேற்றைய) தினம் ஆயுதப்படைக்கு அவமானமிக்க தினம்,” என்று ‘சிஆர்பிஎச்’ எனும் ராணுவ எதிர்ப்புக் குழுவின் பேச்சாளரான டாக்டர் சாசா இணையக் கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

“ராணுவத் தலைவர்கள் 300க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்றுவிட்டு ஆயுதப்படை தினத்தைக் கொண்டாடுகின்றனர்,” என்று அவர் சொன்னார்.

இந்நிலையில், ஆயுதப்படை தினத்தைக் குறிக்கும் விதமாக தலைநகர் நேப்பிடோவில் ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்ட பிறகு அரசாங்கத் தொலைக்காட்சியில் பேசிய ராணுவத் தலைவர் மின் ஆங் லைங், மியன்மாரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அதற்கான கால அட்டவணையை அவர் குறிப்பிடவில்லை.

“ஜனநாயகத்தை முன்னிறுத்த நாட்டு மக்களுடன் சேர்ந்து கைகோர்க்க ராணுவம் விரும்புகிறது,” என்ற அவர் “கோரிக்கைகளை முன்வைக்க நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று விவரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!