இந்தியாவில் ஒரே நாளில் 62,000ஐ கடந்த தொற்று

இந்தியாவில் ஒரே நாளில் 62,000ஐ கடந்த தொற்று

2 mins read

ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொடும் கிருமிப் பரவல் எண்ணிக்கை

இந்­தி­யா­வில் இவ்­வாண்டு இது­வரை இல்­லாத அள­வாக நேற்று காலை வரை­யி­லான 24 மணி நேரத்­தில் புதி­தாக 62,258 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

இந்­தி­யா­வில் 59,118 பேருக்­குத் தொற்று உறு­தி­யா­ன­தாக நேற்று முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அதை­விட இந்த எண்­ணிக்கை 5.3 விழுக்­காடு அதி­கம்.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் 16ஆம் தேதிக்­குப் பிறகு ஒரே நாளில் இத்­தனை பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டி­ருப்­பது இதுவே முதன்­முறை. அக்­டோ­பர் 16ஆம் தேதி 63,371 பேருக்­குத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு இருந்­தது.

அவர்­க­ளை­யும் சேர்த்து இந்­தி­யா­வில் இது­வரை தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்ணிக்கை 11.9 மில்­லி­ய­னாக உயர்ந்துவிட்­ட­தாக இந்­திய சுகா­தார அமைச்சு நேற்று காலை வெளி­யிட்ட தக­வல் தெரி­வித்­தது.

தற்­போது கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை தொடர்ந்து 17வது நாளாக ஏறு­மு­கம் கண்டு 452,647 ஆக உயர்ந்­தது. இந்­தி­யா­வில் இது­வரை பதி­வா­கி­யுள்ள மொத்த தொற்று எண்­ணிக்கை இது 3.8 விழுக்­கா­டா­கும். அதே வேளை­யில், கிரு­மித்­தொற்­றில் இருந்து குணம் அடைந்­தோர் விகி­தம் 94.85 விழுக்­கா­டா­கக் குறைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், மூன்று மாதங்­களில் ஆக அதி­க­மாக கிரு­மித்­தொற்­றுப் பாதிப்­பால் ஒரே நாளில் 291 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக இந்­திய சுகா­தார அமைச்­சின் தக­வல் தெரி­வித்­தது.

இந்­தி­யா­வில் கிரு­மித்­தொற்­றால் ஆக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் இன்று முதல் இர­வு­நேர ஊர­டங்கு உத்தரவு நடப்புக்கு வரும் என்று அம்­மா­நில முதல்­வர் உத்­தவ் தாக்­கரே அறி­வித்­துள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் மட்­டும் புதி­தாக கிட்­டத்­தட்ட 37,000 பேருக்­குத் தொற்று உறு­தி­யா­னது. அந்த மாநி­லத் தலை­ந­கர் மும்­பை­யில் புதிய உச்­ச­மாக 5,500க்கும் அதி­க­மா­னோ­ருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

மகா­ராஷ்­டி­ரா­வில் ஊர­டங்கு கார­ண­மாக அங்கு கடைத்­தொகுதி­கள் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்­படும்.

இந்­தி­யா­வில் நாளுக்கு நாள் தொற்று அதி­க­ரித்து வரு­வ­தால் நாட­ளா­விய தடுப்­பூ­சித் திட்­டத்­தைத் தீவி­ரப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் அதி­கா­ரி­கள் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். அந்­நாட்­டில் ஜன­வ­ரி­யில் தடுப்­பூ­சித் திட்­டம் தொடங்­கி­யது முதல் இது­வரை 58.1 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோ­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

நேற்று காலை வரை­யி­லான 24 மணி நேரத்­தில் 2.6 மில்­லி­யன் பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர்.