புதிய ஐந்து அம்ச அணுகுமுறை

புதிய ஐந்து அம்ச அணுகுமுறை

2 mins read

கொவிட்-19 தொற்று பெருகி வரும் 12 மாநிலங்கள் மீது இந்திய அரசு தீவிர கவனம்

இந்­தி­யா­வில் கொவிட்-19 பர­வல் நில­வ­ரம் கடந்த இரு வாரங்­க­ளாக மோச­ம­டைந்து வரு­கிறது. ஒவ்­வொரு நாளும் கூடு­த­லா­ன­வர்­களுக்குத் தொற்று உறுதி செய்­யப்­பட்டு வரு­கிறது.

அதன்­படி, நேற்­றுக் காலை வரை­யி­லான 24 மணி நேரத்­தில் 62,714 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். புதி­தாக 312 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். வாராந்­திர அடிப்­ப­டை­யில், தொற்று நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 7.7 விழுக்­கா­டும் மர­ண­ம­டைந்தோர் எண்­ணிக்கை 5.1 விழுக்­கா­டும் அதி­க­ரித்­துள்­ளன. கடந்த ஆண்டு மே மாதத்­திற்­குப் பிறகு இந்த அள­விற்கு மோச­மான நிலை ஏற்­பட்டு உள்ளது.

இவ்­வாறு தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தைக் கட்­டுப்­ப­டுத்த மத்­திய அரசு தீவிர முயற்­சி­களை எடுத்து வருகிறது.

குறிப்­பாக, 12 மாநி­லங்­க­ளி­லும் 46 மாவட்­டங்­க­ளி­லும் அதி­கக் கவ­னம் செலுத்­தப்­பட்டு வரு­கிறது. மகா­ராஷ்­டிரா, குஜ­ராத், அரி­யானா, தமிழ்­நாடு, சட்டீஸ்கர், மத்­தி­யப் பிர­தே­சம், மேற்கு வங்­கம், டெல்லி, ஜம்மு-காஷ்­மீர், கர்­நா­டகா, பஞ்­சாப், பீகார் ஆகி­யவையே அந்த மாநி­லங்­கள்.

மோச­மா­கப் பாதிக்­கப்­பட்டு வரும் 46 மாவட்­டங்­களில் 36 மாவட்­டங்­கள் மகா­ராஷ்­டிர மாநிலத்­தில்தான் உள்­ளன. இவற்­றில் 25 மாவட்­டங்­க­ளில்­தான் தொற்று நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை பெருகி வரு­கிறது. கடந்த ஒரு வாரத்­தில் நாடு முழு­வ­தும் பதி­வான தொற்று எண்­ணிக்­கை­யில் 59.8% இந்த மாவட்­டங்­களில் பதி­வா­னவை.

மத்­திய சுகா­தா­ரத் துறைச் செய­லா­ளர் ராஜேஷ் பூஷண் தலை­மை­யில் ஆக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள மாநி­லங்­கள், மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­க­ளு­டன் நேற்று முன்­தி­னம் காணொளி வழி­யாக உயர்­மட்ட ஆலோ­சனைக் கூட்­டம் நடந்தது.

கொரோனா தொற்றைக் கட்­டுப்­ப­டுத்த ஐந்து அம்ச உத்தி ஒன்று இக்­கூட்­டத்­தில் முன்­வைக்­கப்­பட்­டது.

பரி­சோ­த­னை­களை அதி­க­ள­வில் நடத்­து­தல், பாதிப்பு கண்­ட­றியப் பட்ட 72 மணி நேரத்­தில் பாதிக்கப் பட்டோருடன் தொடா்பில் இருந்த ஏறக்­கு­றைய 30 பேரை கண்­ட­றிந்து அவா்களைப் பரி­சோ­தித்து தனி­மைப்­ப­டுத்­து­தல், பொது, தனி­யார் சுகா­தார வளா­கங்­களை மீண்­டும் தயார்­நி­லை­யில் வைத்­தல், சரி­யான கொவிட்-19 விதி­மு­றை­களை உறு­தி­செய்­தல், அதி­க­ள­வில் பாதிப்­பு­கள் பதி­வாகி வரும் மாவட்­டங்­களில் தடுப்பு மருந்து வழங்­கு­வ­தற்­கான இலக்கு சார்ந்த அணு­கு­முறை ஆகி­யன ஐந்து அம்ச உத்­தி­யில் அடங்­கும்.

இத­னைத் தீவி­ர­மா­கச் செயல்­படுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என சம்­பந்­தப்­பட்ட மாநில அர­சு­களை மத்­திய அரசு கேட்­டுக்­கொண்­டது.

கொரோனா தொற்­றால் உயி­ரிழந்தோரில் கிட்டத்தட்ட 90 விழுக்­காட்­டி­னர் 45 வய­துக்கு மேற்­பட்­ட­வா்­கள் என்­றும் கிரு­மித்­தொற்று பாதிப்­பு­கள் குறித்து அறிந்­தி­ருந்­த­போ­தி­லும் 44 விழுக்­காட்­டி­னர்­தான் முகக்­க­வ­சம் அணி­கி­றார்­கள் என்­றும் கூட்­டத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

சந்­தை­கள், பேருந்து நிலை­யங்­கள், பள்ளி, கல்­லூ­ரி­கள், ரயில் நிலை­யங்­கள் உட்பட மக்­கள் அதிகமாகக் கூடும் இடங்­களில் கொரோனா தடுப்பு விதி­மு­றை­கள் பின்­பற்­றப்­ப­டு­வதை மாநில அர­சு­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டது.