சிங்கப்பூரில் புதிதாக 26 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனுடன் இந்நாட்டின் கிருமித்தொற்று எண்ணிக்கை 60, 347க்கு உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் சிங்கப்பூருக்கு வெளியே கிருமித்தொற்று ஏற்பட்டது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சமூக அளவிலோ ஊழியர் தங்கும் விடுதியிலோ கிருமித்தொற்று பதிவாகவில்லை.

