கூடுதலாக மூன்று மாதங்களுக்கு ஆதரவு

கூடுதலாக மூன்று மாதங்களுக்கு ஆதரவு

2 mins read

கொவிட்-19 மீட்சி மானியம் பற்றி அமைச்சு அறிவிப்பு

கொவிட்-19 மீட்சி மானி­யம் கடந்த ஜன­வரி மாதம் தொடங்­கப்­பட்­டது முதல் 10,000க்கும் மேற்­பட்­டோ­ருக்கு உதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. கொவிட்-19 சூழல் கார­ண­மாக பொரு­ளா­தார ரீதி­யாக பாதிப்­ப­டைந்­தோ­ருக்கு இந்த மாதம் 22ஆம் தேதி நில­வ­ரப்­படி ஏறத்­தாழ $10 மில்­லி­யன் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விவ­ரங்­க­ளை­யும் மானி­யத்­தின்­கீழ் கூடு­தல் ஆத­ர­வை­யும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு நேற்று அறி­வித்­தது.

ஏற்­கெனவே இந்த மானி­யத்­தைப் பெற்றுக்­கொண்­ட­வர்­கள், இதற்­கான தகுதிக்­கூ­று­க­ளைத் தொடர்ந்து பூர்த்தி­செய்­யும் பட்­சத்­தில் கூடு­தல் உதவி தேவைப்­பட்­டால் மேலும் மூன்று மாதங்­களுக்கு உத­வி­பெற ஏப்­ரல் 19ஆம் தேதி முதல் விண்­ணப்­பிக்­க­லாம்.

இது­கு­றித்து நேற்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளி­யிட்ட சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, கொவிட்-19 சூழ­லில் சிங்­கப்­பூ­ரர்­கள் சவால்­களை எதிர்­கொள்ள அவர்­க­ளுக்கு அமைச்சு தொடர்ந்து ஆத­ர­வ­ளிக்­கும் என்று கூறி­னார்.

கொவிட்-19 சூழ­லால் பாதிக்­கப்­பட்டு உள்ள குறைந்த, நடுத்­தர வரு­மான ஊழி­யர்­க­ளுக்­கும் தன்­னு­ரிமை ஊழி­யர்­க­ளுக்கும் உதவ ஜன­வரி 18ஆம் தேதி கொவிட்-19 மீட்சி மானி­யம் தொடங்­கப்­பட்­டது.

கொவிட்-19 கார­ண­மாக தங்­க­ளது வேலை­களை இழந்த ஊழி­யர்­கள், அல்­லது சம்­ப­ள­மில்­லாத கட்­டாய விடுப்­பில் சென்­ற­வர்­கள், அல்­லது குறிப்­பி­டத்­தக்க அளவு வரு­மா­னத்தை இழந்­த­வர்­கள் இந்த மானி­யத்­திற்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

ஆட்­கு­றைப்பு கார­ண­மாக வேலை இழந்­த­வர்­கள், அல்­லது வேலை ஒப்­பந்­தம் ரத்து செய்­யப்­பட்­ட­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், அல்­லது குறைந்­தது மூன்று மாதங்­க­ளுக்கு சம்­ப­ள­மில்லா கட்­டாய விடுப்­பில் சென்­ற­வர்­க­ளுக்கு மாதத்­திற்கு $700 வரை என மூன்று மாதங்­க­ளுக்கு இந்த மானி­யம் நிதி ஆத­ரவு வழங்­கு­கிறது.

குறைந்­தது மூன்று மாதங்­க­ளாக சம்­ப­ளக் குறைப்­பால் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளுக்கு மாதத்­திற்கு $500 வரை என மூன்று மாதங்­க­ளுக்கு உதவி வழங்­கப்­ப­டு­கிறது. அத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்கு சரா­சரி ஒட்­டு­மொத்த சம்பளக் குறைப்பு குறைந்­தது 50 விழுக்­கா­டாக இருக்க வேண்­டும்.

தொடர்ந்து மூன்று மாதங்­க­ளாக குறைந்­தது 50 விழுக்­காடு சரா­சரி ஒட்டு­மொத்த வரு­மான இழப்­பால் பாதிக்­கப்­பட்­டுள்ள தன்­னு­ரிமை ஊழி­யர்­க­ளுக்­கும் மாதத்­திற்கு $500 வரை என மூன்று மாதங்­க­ளுக்கு உதவி வழங்­கப்­ப­டு­கிறது.

தற்­போது இந்த மானி­யத்­தைப் பெறு­ப­வர்­கள் வழங்­கீட்­டுத் தொகை­யைப் பெற்­றுக்­கொள்­ளும் கடைசி மாதத்­திலோ கடைசி மாத வழங்­கீட்­டுத் தொகை­யைப் பெற்­றுக்­கொண்ட பிறகோ இரண்­டா­வது முறை­யாக உத­வி­பெற விண்­ணப்­பிக்­க­லாம். முதன்­முறை விண்­ணப்­ப­தா­ரர்­களும் இந்த மானி­யத்­திற்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

மானி­யத்­திற்கு விண்­ணப்­பிக்க https://msf-csg.gov.sg/preinstruction/crg எனும் இணை­யப்­ பக்­கத்­திற்­குச் செல்­ல­லாம். ஏப்­ரல் 18ஆம் தேதி வரை தினந்­தோ­றும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை மானி­யத்­திற்கு விண்­ணப்­பிக்­க­லாம். ஏப்­ரல் 19 முதல் டிசம்­பர் 31ஆம் தேதி வரை இந்த இணையப் பக்­கம் எல்லா நேர­மும் செயல்­படும்.