இந்தியாவிலிருந்து வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றோரில் பத்தில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்

இந்தியாவிலிருந்து வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றோரில் பத்தில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்

1 mins read

இந்­தி­யா­வி­லி­ருந்து கடந்த ஐந்து ஆண்டு­களில் வேலைக்­காக வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்­ற­வர்­களில் பத்­தில் ஒரு­வர் தமி­ழ­கத்­தைச் சேர்ந்­த­வர்.

எண்­ணிக்­கை­யைப் பொறுத்­த­வரை, அந்த ஐந்­தாண்டு கால­கட்­டத்­தில் இந்தி­யா­வில் கேர­ளா­வுக்கு அடுத்­த­ப­டி­யாக தமி­ழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள்­தான் வெளி­நா­டு­க­ளுக்கு அதி­கம் சென்­ற­னர்.

2016 ஜன­வ­ரிக்­கும் இந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் தமி­ழ­கத்­தி­லி­ருந்து வேலைக்­காக 1.31 மில்­லி­யன் பேர் வெளி­நா­டு­களுக்­குச் சென்­ற­தாக இந்­திய வெளி­யு­றவு துணை அமைச்­சர் வீ.முர­ளி­த­ரன் அண்­மை­யில் வெளி­யிட்ட தக­வ­லில் இது தெரி­ய­வந்­துள்­ளது. இதே கால­கட்­டத்­தில் கேர­ளா­வி­லி­ருந்து 1.9 மில்லி­யன் பேர் வேலைக்­காக வெளி­நாடு­களுக்­குச் சென்­ற­னர்.