பிரதமர் லீ: கவனமாகப் பரிசீலிப்பது அவசியம்

பிரதமர் லீ: கவனமாகப் பரிசீலிப்பது அவசியம்

2 mins read

முஸ்லிம் தாதியர் தலையங்கி அணிய அனுமதிப்பது தொடர்பில் முஃப்தி-பிரதமர் கடிதப் பரிமாற்றம்

பணி­யி­டங்­களில் முஸ்­லிம் தாதி­யர் தலை­யங்கி அணி­வது தொடர்­பான நிலைப்­பாட்­டில் மாற்­றம் ஏற்­பட வாய்ப்­புள்­ளதை முஸ்­லிம் சமூ­கத்­தி­னர் வர­வேற்­ப­தாக முஃப்தி டாக்டர் நசிரு­தீன் முகம்­மது நசிர் தெரி­வித்­துள்­ளார்.

இது ஒரு கடி­ன­மான, மாறு­பட்ட பரி­சீ­ல­னை­க­ளு­டன் கூடிய சிக்­க­லான முடிவு என்­பதை முஸ்­லிம் சமூ­கம் அறிந்­துள்­ள­தா­க­வும் இச்­செய்தி முஸ்­லிம் தாதி­ய­ருக்கு ஆறு­தல் தரும் என நம்­பு­வ­தா­க­வும் பிர­த­மர் லீ சியன் லூங்­கிற்­கு எழு­திய கடி­தத்­தில் டாக்­டர் நசிருதீன் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதைத் தொடர்ந்து, பணி­யி­டங்­களில் முஸ்­லிம் தாதி­ய­ரைத் தலை­யங்கி அணிய அனு­ம­திப்­பது தொடர்­பில் அர­சாங்­கத்­தின் கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு ஆத­ரவு அளித்து வரு­வ­தற்­காக டாக்­டர் நசி­ரு­தீ­னுக்­கும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றத்­திற்­கும் (முயிஸ்) பிர­த­மர் லீ பதில் கடி­தம் மூல­மாக நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

முஸ்­லிம் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குத் தலை­யங்கி தொடர்­பில் அதி­க­ரித்து வரும் சமூக-சமய முக்­கி­யத்­து­வத்தை அர­சாங்­கம் உணர்ந்­துள்­ள­தா­கக் கூறிய திரு லீ, அதை எப்­படிச் செய்­வது என்­பது குறித்­துப் பரி­சீ­லித்து வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்டுள்­ளார்.

கடந்த மாதம் 27ஆம் தேதி டாக்டர் நசி­ரு­தீன் எழு­திய கடி­தத்­தை­யும் அதற்­குப் பிர­த­மர் எழு­திய பதில் கடி­தத்­தை­யும் பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று வெளி­யிட்­டது.

தப்­பெண்­ண­மும் பாகு­பா­டும் இன்றி எல்­லா­ரை­யும் சம­மா­கப் பாவிப்­ப­தன் மூல­மும் ஒவ்­வொ­ரு­வரும் தங்­க­ளு­டைய நம்­பிக்­கை­யை­யும் வாழ்க்­கை­மு­றை­யை­யும் கடைப்­பி­டிக்க அனு­ம­திக்­கும் வகை­யில் அனைத்­துச் சமூ­கத்­தி­ன­ரும் பகிர்ந்து­கொள்­ளும் ஒரு தேசிய அடை­யா­ளத்தை உரு­வாக்­கி­ய­தன் மூல­மும் இன, சமய நல்­லி­ணக்­கத்­தில் சிங்­கப்­பூர் ஒரு நுண்­மை­யான சம­நி­லையை எட்­டி­யுள்­ளது என்று பிர­த­மர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"ஆயி­னும், அந்­தச் சம­நிலை மாறக்­கூ­டி­யது. சிங்­கப்­பூ­ரின் இளம் தலை­மு­றை­யி­னர் வள­ரும்­போ­தும் மனப்­பான்மை மாறும்­போ­தும், புதிய பிரச்­சி­னை­களும் அழுத்­தங்­களும் எழ­லாம். சிங்­கப்­பூர் சூழ­லைக் கருத்­தில்­கொண்டு அவற்­றுக்கு விடை காணப்­பட வேண்­டும்," என்­றார் பிர­த­மர்.

"எந்த ஒரு மாற்­ற­மும் கவ­ன­மான பரி­சீ­ல­னைக்­குப் பிற­கும் படிப்­ப­டி­யா­க­வும் இடம்­பெ­ற­வேண்­டும். அப்­பொ­ழு­து­தான் அனைத்­துச் சமூ­கங்­களும் மாற்­றங்­க­ளைப் புரிந்து­கொண்டு ஏற்­றுக்­கொள்­ளும்; அம்­மு­டி­வு­கள் நமது இன, சமய நல்­லி­ணக்­கத்தை வலுப்­ப­டுத்­தும்," என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மூத்த முஸ்­லிம் தலை­வர்­க­ளைச் சந்­தித்­த­போது, பணி­யி­டங்­களில் முஸ்­லிம் தாதி­யர் தலை­யங்கி அணிய அனு­ம­திப்­பது குறித்து அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் தெரி­வித்­தி­ருந்­தார். அதைத் தொடர்ந்து இந்­தக் கடி­தப் பரி­மாற்­றங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.