சமூகத்தொடர்பு சுருங்கி வேலைப்பளு கூடியது

சமூகத்தொடர்பு சுருங்கி வேலைப்பளு கூடியது

3 mins read

கொவிட்-19 முறியடிப்புத் திட்டம் அறிமுகமாகி ஓராண்டு நிறைவு

'சர்க்­கிட் பிரேக்­கர்' எனப்­படும் கொவிட்-19 நோய் முறி­ய­டிப்­புத் திட்­டம் சிங்­கப்­பூ­ரில் கடந்த ஆண்டு ஏப்­ரல் 7ஆம் தேதி அறி­மு­கம் செய்­யப்­பட்­டது. அந்த ஆண்டு ஜூன் 1 வரை அது நடப்­பில் இருந்­தது. திட்டம் அறி முகம் கண்டு ஓராண்டு நிறை­வு­பெ­று­வ­தை­யொட்டி 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தாள், மக்­க­ளி­டையே ஆய்வு ஒன்றை நடத்த ஏற்­பாடு செய்­தது.

ஆய்­வில் பங்­கேற்ற 1,000 பேரில் 61 விழுக்­காட்­டி­னர் இந்த ஓராண்டு காலத்­தில் தங்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­க­ளைத் தவிர்த்த மற்­ற­வர்­க­ளு­ட­னான சமூ­கத் தொடர்பு குறைந்­து­விட்­ட­தா­கக் கூறி­னர்.

மேலும், தங்­க­ளது குடும்­பத்­துக்கு வெளியே சமூக வட்­டா­ரம் சுருங்­கி­விட்­ட­தாக 44 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

அதே­நே­ரம் தங்­க­ளது குடும்­பத்­து­டன் இந்த ஓராண்­டில் அதிக நேரம் செலவழிக்க முடிந்­த­தாக 20 விழுக்­காட்­டி­னர் குறிப்­பிட்­ட­னர். ஆயி­னும் அந்த அளவுக்கு இல்லை என 23 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

இணை­யம் வழியே நடத்­தப்­பட்ட ஆய்­வில் 16 வய­தி­ன­ரும் அதற்கு மேற்­பட்ட வய­தி­ன­ரும் பங்­கேற்­ற­னர். மிலியு இன்­சைட் என்­னும் நிறு­வ­னம் இவ்­வாண்டு மார்ச் 25 முதல் மார்ச் 29 வரை ஆய்வை மேற்­கொண்­டது.

தங்­க­ளுக்­கும் தங்­க­ளது குடும்­பத்­தி­ன­ருக்­கும் இடை­யே­யான நெருக்­கம் அதி­க­ரித்­த­தாக 27 விழுக்­காட்­டி­னர் கூறிய வேளை­யில் 7 விழுக்­காட்­டி­னர் அவ்­வாறு இல்லை என்­ற­னர்.

2020 ஏப்­ரல் 7ஆம் தேதி கொவிட்-19 நோய் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­புக்கு வந்த பின்­னர் பல தடை­கள் அறி­மு­கம் செய்­யப்­பட்­டன. கடை­களில் அமர்ந்து சாப்­பி­ட­வும் அத்­தி­யா­வ­சிய கார­ணங்­கள் இன்றி வீட்­டை­விட்டு வெளியே செல்­ல­வும் தடை விதிக்­கப்­பட்டு இருந்­தது. அதி­க­மான வேலை­யி­டங்­களும் பள்­ளிக்­

கூ­டங்­களும் மூடப்­பட்­டன.

தற்­போது அந்­தக் கட்­டுப்­

பா­டு­கள் கொஞ்­சம் கொஞ்­ச­மா­கத் தளர்த்­தப்­பட்டு வரு­கின்­றன. இருந்­த­போ­தி­லும் பெரிய அள­வி­லான நிகழ்­வு­க­ளுக்­கும் கொண்­டாட்­டங்­க­ளுக்­கும் இன்­னும் அனு­மதி இல்லை.

இந்­நிை­ல­யில், இந்த ஓராண்டு காலத்­தில் மக்­கள் தங்­க­ளுக்கு இடை­யி­லான சமூ­கத் தொடர்­பைக் குறைத்­துக் கொண்­ட­தற்­கு பல்­வேறு கார­ணங்­கள் இருப்­ப­தாக சிங்­கப்­பூர் தேசிய பல்

­க­லைக்­க­ழ­கத்­தின் சமூ­க­வி­யல் துறை துணை பேரா­சி­ரி­யர் டான் எர்ன் செர் கூறு­கி­றார்.

"ஒரு­வ­ரோடு ஒரு­வர் நேர­டி­யா­கச் சந்­தித்­துப் பேசாத நிலை­யில் அவர்­கள் மின்­னி­லக்­கம் வழி தொடர்பு வைத்­தி­ருக்க வாய்ப்பு உள்­ளது. வீட்­டி­லி­ருந்து வேலை செய்­தல், வேலைப்­பளு அதி­

க­ரிப்பு போன்ற கார­ணங்­க­ளால் சக ஊழி­யர்­க­ளைச் சந்­திக்க இய­லா­மல் இருக்­க­லாம்," என்­றார் அவர்.

இருப்­பி­னும் சமூக ஆத­ரவு, தக­வல் பரி­மாற்­றம் போன்ற பலன்­களை அடைய பொது­மக்­கள் தங்­க­ளது சமூ­கக் கட்­ட­மைப்பை விரி­வாக்கி பரா­ம­ரிப்­பது அவ­சி­யம் என்று பேரா­சி­ரி­யர் டான் ஆலோ­சனை வழங்­கி­னார்.

ஓராண்­டில் புதிய திறன் அல்­லது விருப்ப வேலை­யைப் பெற்­ற­தாக 60 விழுக்­காட்­டி­னர் கூறி­னர். இவர்­களில் 94 விழுக்­காட்­டி­னர் புதிய திறன்­கள் அல்­லது விருப்ப வேலை­யில் சில­வற்றை இன்­னும் பயன்­ப­டுத்­து­வ­தா­கக் கூறி­னர். புதிய திறன்­கள் பெறு­வ­தைத் தொடர்­வ­தா­க­வும் இவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

எதிர்­மறை விளை­வு­களும் இந்த ஓராண்­டில் நிகழ்ந்­தி­ருப்­பதை ஆய்வு உணர்த்­தி­யது. தங்­க­ளது மன­நலச் சுகா­தா­ரம் மோச­

ம­டைந்­த­தாக 36 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

தங்­க­ளது வாழ்க்கை அதிக மின்­னி­லக்­க­ம­ய­மாகி இருப்­ப­தாக சிலர் கூறி­னர். அதன் கார­ண­மாக ரொக்­க­மற்ற பரி­வர்த்­த­னை­யைக் கடைப்­பி­டிப்­ப­தாக மூன்­றில் இரு பங்­கி­னர் கூறி­னர்.

ஆய்­வில் பங்­கேற்­றோ­ரில் 52 விழுக்­காட்­டி­னர், கொவிட்-19 நோய் முறி­ய­டிப்­புத் திட்­டம் தொடங்­கி­யது முதல் தங்­க­ளுக்­கான வேலைப்­பளு கூடி­ய­தா­கக் கூறி­னர். ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டது இதற்கு ஒரு கார­ண­மாக இருக்­க­லாம் என்­கின்­ற­னர் அவர் கள். அத­னால், இரவு பகல் எந்த நேரத்­தி­லும் அலு­வ­லக மின்­னஞ்­ச­லுக்­குப் பதில் அளிக்­கும் அள­வுக்கு அழுத்­தம் ஏற்­பட்­ட­தா­கச் சிலர் கூறி­னர்.