தொடக்கநிலை 3, 4 மாணவர்களுக்கு உயர்தமிழ் வகுப்புகள்

தொடக்கநிலை 3, 4 மாணவர்களுக்கு உயர்தமிழ் வகுப்புகள்

2 mins read
5cbaf7a1-e852-43cc-bc37-bd6dac72c0a3
கொவிட்-19 கிருமித் தொற்றுக்கு முன் கடந்தாண்டு செங்காங் தொடக்கப் பள்ளி உயர் தமிழ் முன்னோட்டத் திட்டத்தில் ஈடுபடும் மாணவி அன்‌ஷிதா. அவருடன் தமிழ் ஆசிரியர் திருமதி ஜெயசுதா விஜய்.படம்: செங்காங் தொடக்கப் பள்ளி -

சிங்கப்பூரின் பள்ளிகளில் உயர் தமிழ் பாடத்தைப் படிக்கும் வாய்ப்பு அமைய உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்க நிலை 3 மாணவர்களுக்கும் 2023ல் தொடக்க நிலை 4 மாணவர்களுக்கும் உயர்தமிழ் கற்கும் வாய்ப்பு கிட்டும். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டம் வெற்றி யடைந்ததைத் தொடர்ந்து இது நடப்புக்கு வருகிறது.

கல்வி இரண்­டாம் அமைச்­சர் டாக்­டர் மாலிக்கி ஒஸ்­மான் நேற்று இதனை அறி­வித்­தார். புதிய பாடத்­திட்­டத்­திற்­கான முன்­னோ­டிப் பள்­ளி­க­ளுள் ஒன்­றான வெஸ்ட்­வூட் தொடக்­கப் பள்­ளிக்­குச் சென்­றி­ருந்­த­போது அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

கடந்த ஆண்­டில் 35 தொடக்­கப் பள்­ளி­களும் இவ்­வாண்டு 54 தொடக்­கப் பள்­ளி­களும் இந்த முன்­னோட்­டத் திட்­டத்­தில் பங்­கெ­டுத்­தன.

இப்­பு­திய பாடத்­திட்­டத்­தின் அறி­மு­கம் ஏற்­கெ­னவே தொடக்­க­நிலை 3, 4 மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் உயர் சீன வகுப்­பு­க­ளை­யும் தொடக்­க­நிலை ஐந்­தாம், ஆறாம் நிலை­களில் வழங்­கப்­படும் உயர் தாய்­மொழி வகுப்­பு­க­ளை­யும் பூர்த்­தி­செய்­கிறது என்று கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

"கூடு­த­லான தமிழ் இலக்­கி­யம், பண்­பாடு தொடர்­பான தக­வல்­களை மாண­வர்­க­ளுக்கு எளி­தில் புரி­யும் வகை­யில் அறி­மு­கப்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் இப்­பா­டத்­திட்­டம் வரை­யப்­பட்­டது," என்று கல்வி அமைச்­சின் பாடக்­க­லைத்­திட்ட வரைவு, மேம்­பாட்­டுப் பிரிவு, தமிழ்­மொ­ழிப் பகுதி மூத்த சிறப்­பாய்­வா­ளர் திரு­வாட்டி தமிழ்­வாணி முத்து தெரி­வித்­தார்.

இலக்­கி­யக் கதை­கள், விளை­யாட்டு முறை­யில் இலக்­க­ணம், வாக்­கி­யம் அமைத்­தல், சொல்­வ­ளப் பெருக்­கம் போன்­ற­வற்­றைக் கற்­பிக்க, மாண­வர்­கள் அதிக ஈடு­பாட்­டு­டன் நட­வ­டிக்­கை­களில் கலந்­து­கொண்­ட­தாக திட்­டத்­தில் பங்­கேற்ற தமிழ் ஆசி­ரி­யர்­கள் தம்­மி­டம் கூறி­ய­தாக அவர் குறிப்­பிட்­டார். செங்­காங் தொடக்­கப் பள்­ளி­யில் தமி­ழா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றும் திரு­மதி ஜெய­சுதா விஜய் புதிய பாடத்­திட்­டம் மாண­வர்­கள் தன்­னம்­பிக்­கை­யோடு தமி­ழில் கருத்­து­களை முன்­வைக்க உத­வுவ­தா­கவும் குறிப்­பிட்­டார்.

"ராமா­யணக் காப்­பி­யத்­தில் இடம்­பெ­றும் கதாப்­பாத்­தி­ரத்­தைப் பற்றி வகுப்­பில் படித்­து­விட்டு, வீட்­டிற்கு வந்த பின்­னர் இணை­யம் வழி ஆராய்ந்து, மறு­நாள் அந்­தக் கதாப்­பாத்­தி­ரத்­தைப் பற்­றிய சுவா­ர­சிய தக­வல்­களை வகுப்­பில் அவர்­கள் பகிர்ந்து­கொள்­ளும்­போது இன்­னும் ஆழ­மாக சிந்திக்­கத் தொடங்­கு­

கி­றார்­கள்," என்­றார் அவர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இத்­திட்­டத்­தில் கடந்­தாண்­டி­லி­ருந்து இடம்­பெ­றும் அவ­ரது வகுப்பு மாண­வ­ரான 10 வயது அன்­‌ஷிதா சுதா­கர், ஆசி­ரி­யர் வகுப்­பில் கதை­கள் சொல்­வ­தும் கவிதை எழுத சொல்­லிக்­கொ­டுப்­ப­தும் தமக்கு பிடித்­தவை என்று விளக்­கி­னார்.