மேற்கு வங்கத் தேர்தலின்போது துப்பாக்கிச்சூடு; நால்வர் மரணம்

மேற்கு வங்கத் தேர்தலின்போது துப்பாக்கிச்சூடு; நால்வர் மரணம்

2 mins read

இந்­தி­யா­வின் மேற்கு வங்க மாநிலத்­தில் வாக்­குப்­ப­தி­வின்­போது இடம்­பெற்ற மோத­லில், மத்­திய பாது­காப்­புப் படை­யி­னர் சுட்­ட­தில் நால்­வர் உயி­ரி­ழந்­த­னர்.

மேற்கு வங்­கத்­தில் நேற்று நான்­காம் கட்­ட­மாக 44 தொகு­தி­க­ளுக்கு வாக்­குப்­ப­திவு நடந்­தது.

இந்­நி­லை­யில், கூச் பிகார் மாவட்­டத்­தில் சீத்­தல்­குச்சி பகு­தி­யில் இருந்த வாக்­குச்­சா­வ­டிக்கு வெளியே மோதல் வெடித்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. உள்­ளூர்­வா­சி­களின் தாக்­கு­த­லில் இருந்து தங்­க­ளைப் பாது­காத்­துக் கொள்­வதற்­காக பாது­காப்­புப் படை­யி­னர் அவர்­கள்­மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதில் நால்­வர் மாண்­ட­தைத் தொடர்ந்து அவ்­வாக்­குச்­சா­வ­டி­யில் வாக்­குப்­பதிவு நிறுத்­தப்­பட்­டது.

இதை­ய­டுத்து, மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி சம்­ப­வம் நிகழ்ந்த சீத்­தல்­குச்சி பகு­திக்கு இன்று நேரில் செல்­ல­வி­ருக்­கி­றார். அத்­து­டன், மாநி­லம் முழு­வ­தும் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் கறுப்­புப் பட்டை அணிந்து இன்று ஆர்ப்­பாட்­டம் நடத்­த­வுள்­ள­னர்.

சம்­ப­வம் தொடர்­பில் நேற்று மாலை 5 மணிக்­குள் விரி­வான அறிக்கை தாக்­கல் செய்­யு­மாறு தேர்­தல் ஆணை­யம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இத­னி­டையே, நால்­வர் மர­ணத்­திற்கு இரங்­கல் தெரி­வித்த இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி, மேற்கு வங்க முதல்­வர் மம்­தா­வை­யும் அவ­ரது திரி­ணா­மூல் கட்­சி­யை­யும் கடு­மை­யா­கச் சாடினார்.

"கூச் பிகா­ர் சம்பவம் வருத்த­ம் அளிக்­கிறது. துய­ரி­னில் ஆழ்ந்­துள்ள குடும்­பத்­தி­ன­ருக்கு இரங்­கல் தெவித்­துக்­கொள்­கி­றேன். மக்­கள் மத்­தி­யில் பாஜ­க­விற்­குப் பெருகி வரும் ஆத­ர­வைக் கண்டு மம்­தா­வும் திரி­ணா­மூல் குண்­டர்­களும் நடுங்­கிப்­போ­யுள்­ள­னர்," என்று பிர­த­மர் மோடி கூறி­யுள்­ளார்.

சீத்­தல்­குச்சி துப்­பாக்­கிச்­சூட்­டிற்கு மத்­திய அரசே கார­ணம் எனச் சாடிய மம்தா, அதற்­குப் பொறுப்­பேற்று மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா பதவி விலக வேண்­டும் என வலி­யு­றுத்­தி இருக்கிறார்.

"வெற்­றி­பெற முடி­யாது என பாஜ­க­விற்­குத் தெரி­யும். அத­னால்­தான் அது வெடி­குண்­டு­க­ளை­யும் வன்­மு­றை­யை­யும் நாடி வரு­கிறது," என்று அவர் கூறினார்.