இந்தியா, தாய்லாந்து தவிப்பு

அன்றாடம் பதிவாகும் கிருமித்தொற்று சம்பவங்கள் புதிய உச்சத்தைத் தொட்டன

இந்­தி­யா­வி­லும் தாய்­லாந்­தி­லும் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் நில­வ­ரம் புதிய உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது. இரண்­டாம் கட்ட கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள இந்­தி­யா­வில் நேற்­றுக் காலை வரை­யி­லான 24 மணி நேரத்­தில் 152,879 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­யின. அங்கு ஒரே­நா­ளில் பதி­வான ஆக அதிக எண்­ணிக்கை இது.

மேலும் 24 மணி நேரத்­தில் 839 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­தாக இந்­திய சுகா­தார அமைச்சு தனது அறிக்­கை­யில் கூறி­யது. ஐந்து மாதங்­களில், அதா­வது கடந்த ஆண்டு அக்­டோ­பர் 18ஆம் தேதிக்­குப் பிறகு அங்கு பதி­வாகி இருக்­கும் ஆக அதிக மரண எண்­ணிக்கை இது.

புதிய மர­ணங்­க­ளை­யும் சேர்த்து அங்கு இது­வரை உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 169,275 ஆக அதி­க­ரித்­தது. கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் அடிப்­ப­டை­யில் அமெ­ரிக்கா, பிரே­சி­லுக்கு அடுத்த மூன்­றாம் நிலை­யில் இந்­தியா உள்­ளது.

புதி­தாக நேற்று அறி­விக்­கப்­பட்­ட­வர்­க­ளை­யும் சேர்த்து அங்கு தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 13.35 மில்­லி­ய­னைக் கடந்­து­விட்­டது.

இந்­தி­யா­வில் தொடர்ந்து ஒவ்­வொரு நாளும் அதிக எண்­ணிக்­கை­யில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன.

தொற்று எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கும் மகா ராஷ்டிர மாநிலத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் முடக்கம் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக மும்பை நகரில் வாகனப் போக்குவரத்து நேற்று அடியோடு முடங்கியது.

தற்­போது சிகிச்­சை­யில் இருப்­போ­ரின் எண்­ணிக்கை 1.1 மில்­லி­ய­னாக உயர்ந்­து­விட்­டது. அதா­வது கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்­கை­யில் 8.29 விழுக்­காட்­டி­னர் சிகிச்­சை­யில் உள்­ள­னர். அதன் கார­ண­மாக தொற்­றி­லி­ருந்து மீண்டு வீடு திரும்­பு­வோ­ரின் விகி­தம் 90.44 விழுக்­காட்­டுக்­குக் குறைந்­து­விட்­டது.

இந்­நி­லை­யில் தென்­கி­ழக்­கா­சிய நாடான தாய்­லாந்­தில் நேற்று புதி­தாக 967 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அந்­நாட்­டில் ஒரே நாளில் பதி­வாகி இருக்­கும் ஆக அதிக எண்­ணிக்கை இது. அங்கு மூன்­றாம் கட்­ட­மாக கிரு­மித்­தொற்று பரவி வரு­கிறது. புதி­ய­வர்­க­ளை­யும் சேர்த்து அங்கு பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 32,625 ஆக அதி­க­ரித்­து­விட்­டது.

இருந்­த­போ­தி­லும் மரண எண்­ணிக்கை 100க்கும் கீழ் 97 என்ற அள­வில் நீடிப்­ப­தாக தாய்­லாந்­தின் கொவிட்-19 தக­வல் நிலை­யம் கூறி­ யது. பெருகி வரும் நோ­யா­ளி­க­ளைச் சமா­ளிக்க தலை­ந­கர் பேங்­காக்­கில் 10,000 படுக்­கை­கள் மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­பட உள்­ள­தாக தாய்­லாந்து மருத்­துவ சேவைத்­துறை தலைமை இயக்­கு­நர் டாக்­டர் சுக்­சன் கிட்­டி­சு­பா­கோர்ன் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!