மலேசியாவில் இரு தடுப்பூசிகளையும் 385,000 பேர் போட்டுக்கொண்டனர்

மலேசியாவில் இரு தடுப்பூசிகளையும் 385,000 பேர் போட்டுக்கொண்டனர்

1 mins read

மலே­சி­யா­வில் சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி 385,251 பேர் இரு தவணை தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொண்டு உள்­ள­தாக மலே­சிய சுகா­தார அமைச்­சர் டாக்­டர் ஆதம் பாபா தெரி­வித்து உள்­ளார்.

தேசிய கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டத்­தின் முதற்­கட்­டத்­தில் இவ்­வ­ளவு அதி­க­மா­னோர் இரண்டு ஊசி­க­ளை­யும் போட்­டுக்­கொண்டு உள்­ள­தாக அவர் நேற்று தமது டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டார்.

அதே­போல இந்த முதற்­கட்ட நட­வ­டிக்­கை­யின்­போது 571,472 பேர் முதல் தவணை தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்டு உள்­ள­னர்.

எல்­லா­வற்­றை­யும் சேர்த்து சனிக்­கி­ழமை போடப்­பட்ட தடுப்­பூ­சி­க­ளின் தவணை எண்­ணிக்கை 956,723 என்று அவர் கூறி­யுள்­ளார். நாட்­டி­லேயே சிலாங்­கூர் மாநில மக்­கள்­தான் தடுப்­பூசி போட்டுக்கொண்­டோர் பட்­டி­ய­லில் முத­லி­டத்­தில் உள்­ள­னர். அங்கு 76,612 பேர் முதல் தவணை தடுப்­பூ­சி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். அதற்கு அடுத்த நிலை­களில் சர­வாக் (59,531), சாபா (54,058), பேராக் (52,677), கோலா­லம்­பூர் (52,110) பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு உள்­ள­னர்.

மேலும், மலேசிய மக்களில் 8,443,581 பேர் அல்­லது 34.80 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள பதிவு செய்­துள்­ள­தா­க­வும் டாக்­டர் ஆதம் பாபா தெரி­வித்­துள்­ளார். பிப்ரவரி தொடங்கி இம்மாதம் நிறைவுபெற இருக்கும் முதற்கட்ட தடுப்பூசித் திட்டத்தில் 500,000 முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வர்.