பிள்ளை தத்தெடுப்பை முறைப்படுத்த புதிய சட்டவிதிகள் பரிசீலனை

பிள்ளை தத்தெடுப்பை முறைப்படுத்த புதிய சட்டவிதிகள் பரிசீலனை

1 mins read

சிங்­கப்­பூ­ரின் தத்­தெ­டுப்பு நடை­மு­றையை ஒழுங்­கு­ப­டுத்த புதிய சட்­டங்­க­ளுக்­குத் திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.

முறை­யற்ற தத்ெத­டுப்பை குற்­ற­மாக்­கும் வகை­யில் அந்­தச் சட்­டங்­கள் அமைய உள்­ளன. தங்­க­ளது பிள்­ளையை தத்­து­கொடுக்க சம்­ம­திக்­கும் பெற்­றோர்­கள் தத்­தெ­டுப்பு நடை­மு­றையை நிறை­வேற்­றும் வேளை­யில் அது தொடர்­பான முக்­கிய தக­வல்­களை மறைக்­கும் தந்­தி­ரத்தை முறி­ய­டிக்­க­வும் புதிய முயற்­சி­கள் கைகொ­டுக்­கும் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு தெரி­வித்து உள்­ளது. குழந்­தைத் தத்­தெ­டுப்­புச் சட்­டம் தொடர்­பான மறு­ஆய்­வின் தொடர்­பில் பொது­மக்­க­ளி­டம் கலந்­து­ரை­யா­டல் நடத்­தப்­பட்­டது. அப்­போது வெளி­யான கருத்­து­ரைப்­பு­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும் வித­மாக அமைச்சு இத­னைத் தெரி­வித்து உள்­ளது.

தத்­தெ­டுப்பு தொடர்­பான புதிய குற்­றங்­க­ளுக்கு சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்க அமைச்சு உத்­தே­சித்­துள்­ள­தாக அர­சாங்­கத்­தின் கருத்­த­றி­யும் இணை­யத்­த­ள­மான 'ரீச்'சில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்ட தக­வ­லில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மோசடி மூலம் குழந்­தை­யைத் தத்­தெ­டுக்க அனு­ம­திப்­பது, முழு­மை­ய­டை­யாத, தவ­றான, பொய்­யான ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பிப்­பது அல்­லது தக­வல்­க­ளைக் கொடுப்­பது, தத்­தெ­டுக்­கத் தகு­தி­யா­ன­வர் என்று முடிவு செய்­யப்­ப­டா­த­வ­ரி­டம் பிள்­ளை­யைக் கொடுப்­பது, அவ­ரின் பரா­ம­ரிப்­பில் பிள்­ளையை வைப்­பது போன்­ற­வற்றை குற்­ற­மாக வகைப்­ப­டுத்­தப் பரி­சீ­லிக்­கப்­ப­டு­கிறது.

பொது­மக்­களும் தத்­தெ­டுப்­பில் ஈடு­ப­டு­வோ­ரும் சட்­ட­வி­தி­க­ளுக்கு உட்­ப­டாத தத்­தெ­டுப்பு பற்றி புகார் தெரி­விக்க வேண்­டும் என அமைச்சு விரும்­பு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.