சாலைகளில் சைக்கிள் ஓட்ட உரிமம், தேர்வு குறித்து நிபுணர்கள் மறுஆய்வு

சிங்கப்பூரின் சாலைகளில் சைக்கிளோட்டுவோர் தொடர்பான ஒழுங்குமுறை விதிகளை நிபுணர் குழு ஒன்று மறுஆய்வு செய்ய உள்ளது. 

அவர்களுக்கு உரிமம் தேவைப்படுமா என்பது பற்றியும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட வேண்டுமா என்பது பற்றியும் குழு பரிசீலிக்கும்.

போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் இன்று (ஏப்ரல் 12) இதனை அறிவித்தார். 

இந்த ஆய்வை மேற்கொள்ள துடிப்புமிக்க நடமாட்டத்திற்கான ஆலோசனைக் குழு பல மாதங்களை எடுத்துக்கொள்ளும் என்றும் பொதுமக்களிடம் இருந்து அது கருத்துகளைக் கேட்டறியும் என்றும் திரு சீ கூறினார்.

சைக்கிளோட்டிகள் சாலைகளில் தவறிழைப்பது தொடர்பாக அண்மையில் புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து மறுஆய்வு யோசனை பிறந்தது. 

சைக்கிள் ஓட்டுவதற்கு பதிவு தேவை என்பதை புகார் தெரிவித்த சிலர் வலியுறுத்தினர்.

சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது தொடர்பில் வாகன ஓட்டுநர்களிடம் இருந்தும் சைக்கிளோட்டிகளிடம் இருந்தும் எழுந்துள்ள அக்கறைகளை அரசாங்கம் கவனித்ததைத் தொடர்ந்து மறுஆய்வு முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

சைக்கிளை ஓட்ட உரிமம் அறிமுகம் செய்வதில் உள்ள நேர்மறை, எதிர்மறை அம்சங்களைப் பரிசீலிக்க இருக்கும் குழு அதற்காக பிற நாடுகளின் நடைமுறைகளை ஆராயும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!