மீண்டும் 2ஆம் இடம்

மீண்டும் 2ஆம் இடம்

2 mins read

ஒரே நாளில் அதி­கமான கிரு­மிப் பர­வல் என்­ப­தில் இந்­தியா மீண்­டும் உச்சத்­தைத் தொட்­டுள்­ளது. திங்­கட்­கி­ழமை காலை அறி­விக்­கப்­பட்ட தக­வ­லின்­படி 24 மணி நேரத்­தில் நாடு முழு­வ­தும் 168,912 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்டு உள்­ளது.

ஒரே நாளில் இந்த அள­வுக்கு அதி­க­மா­கத் தொற்­றுச் சம்­ப­வம் பதி­வாகி இருப்­பது உல­கில் முதல்­முறை என்று ராய்ட்­டர்ஸ், புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னங்­கள் குறிப்­பிட்டுள்­ளன. இந்த அபா­ய­நிலை இத்­து­டன் நின்­று­வி­டப் போவ­தில்லை. தற்­போது விம­ரி­சை­யாக நடை­பெற்று வரும் கும்­ப­மேளா திரு­வி­ழா­வில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் ஒரே பகு­தி­யில் குழுமி வரு­வ­தால் தொற்று எண்­ணிக்கை மேலும் வேக­மாக அதி­க­ரிக்­கும் என­வும் அவை குறிப்­பிட்டு உள்­ளன. திங்­கட்­கி­ழமை நில­வ­ரப்­படி உல­கில் பதி­வான ஒட்­டு­மொத்த கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் ஆறில் ஒன்று இந்­தி­யா­வில் உள்­ளது. ஒவ்­வொரு நாளும் பல்­லா­யி­ரம் பேர் பாதிக்­கப்­பட்டு வரு­வ­தைத் தொடர்ந்து நேற்று உலக அள­வி­லான கிரு­மித்­தொற்று எண்­ணிக்­கை­யில் பிரே­சி­லைப் பின்­னுக்­குத் தள்­ளி­விட்டு இந்­தியா மீண்­டும் இரண்­டாம் இடத்­திற்­குச் சென்­று­விட்­டது. இந்­தி­யா­வின் தற்­போ­தைய மொத்த கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 13.53 மில்­லி­யன்.

பிரே­சி­லில் அந்த எண்­ணிக்கை 13.48 மில்­லி­யன். 31.2 மில்­லி­யன் தொற்று சம்­ப­வங்­க­ளோடு முத­லி­டத்­தில் அமெ­ரிக்கா தொட­ரு­கிறது. கிரு­மிப் பர­வல் தொடக்க காலத்­தில் அமெ­ரிக்காவுக்கு அடுத்த நிலை­யி­லி­ருந்த இந்­தி­யா­வில் நிலைமை முன்­னேற்­றம் கண்­ட­தைத் தொடர்ந்து மூன்­றா­வது இடத்­திற்­குச் சென்­றி­ருந்­தது. தற்போது இரண்டாவது அலை வேகமெடுத்திருப்பதால் நிலைமை மீண்டும் மோசமடைந்துள்ளது.

தொற்­றுச் சம்­ப­வங்­க­ளோடு உயிர்ப்­ப­லி­யும் இந்­தி­யா­வில் அதி­ க­ரித்த வண்­ணம் உள்­ளது. திங்­கட்­கி­ழமை வெளி­யான தக­வ­லின்­படி 24 மணி நேரத்­தில் 904 பேர் கிரு­மித்­தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர். ஞாயிற்­றுக்­கி­ழமை அந்த எண்­ணிக்கை 839 ஆக இருந்­தது. அக்­டோ­பர் 18ஆம் தேதிக்­குப் பிறகு அதிக மர­ணம் நிகழ்ந்­தி­ருப்­பது இப்­போ­து­தான். புதிய மர­ணங்­க­ளை­யும் சேர்த்து தொற்று கார­ண­மாக மாண்­டோர் எண்­ணிக்கை 170,179 என அதி­

க­ரித்­தது.

உத்­த­ர­காண்ட் மாநி­லம் ஹரித்­து­வார் பகு­தி­யில் அமைந்­துள்ள கங்­கைக் கரை­யில் 12 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடத்­தப்­படும் கும்­ப­மேளா திரு­விழா தற்­போது நடந்து வரு­கிறது. அங்கு நேற்று முன்­தி­னம் ஹரித்­து­வா­ரில் கூடிய பல்­லா­யி­ரம் பேரில் பெரும்­பா­லா­னோர் முகக்­க­வ­சம் அணி ­ய­வில்லை. சமூக இைட வெளி நடை­மு­றை­யும் சரி­வ­ரப் பின்­பற்­றப்­ப­ட­வில்லை. எனவே தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை மேலும் பெரு­கும் என்று சுகா­தார நிபு­ணர்­கள் எச்­ச­ரிக்கை விடுத்து உள்­ள­னர். பரவலைக் கட்டுப் படுத்த தடுப்பூசி நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கட்டுப்படாத கிருமிப் பரவல்; 170,000 பேர் மரணம்