சைக்கிள் ஓட்ட உரிமம், தேர்வு குறித்து நிபுணர்கள் மறுஆய்வு

சைக்கிள் ஓட்ட உரிமம், தேர்வு குறித்து நிபுணர்கள் மறுஆய்வு

2 mins read

சிங்கப்பூரின் சாலை­களில் சைக்­கி­ளோட்­டு­வோர் தொடர்­பான ஒழுங்­கு­முறை விதி­களை நிபு­ணர் குழு ஒன்று மறு­ஆய்வு செய்ய உள்­ளது.

அவர்­க­ளுக்கு உரி­மம் தேவைப்­ப­டுமா என்­பது பற்­றி­யும் எழுத்­துத் தேர்வு நடத்­தப்­பட வேண்­டுமா என்­பது பற்­றி­யும் குழு பரி­சீ­லிக்­கும்.

போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் ேநற்று இதனை அறி­வித்­தார்.

இந்த ஆய்வை மேற்­கொள்ள துடிப்­பு­மிக்க நட­மாட்­டத்­திற்­கான ஆலோ­ச­னைக் குழு பல மாதங்­களை எடுத்­துக்­கொள்­ளும் என்­றும் பொது­மக்­க­ளி­டம் இருந்து அது கருத்­து­க­ளைக் கேட்­ட­றி­யும் என்­றும் திரு சீ கூறி­னார்.

சைக்­கி­ளோட்­டி­கள் சாலை­களில் தவ­றி­ழைப்­பது தொடர்­பாக அண்­மை­யில் புகார்­கள் பெறப்­பட்­ட­தைத் தொடர்ந்து மறு­ஆய்வு யோசனை பிறந்­தது.

சைக்­கிள் ஓட்­டு­வ­தற்கு பதிவு தேவை என்­பதை புகார் தெரி­வித்த சிலர் வலி­யு­றுத்­தி­னர்.

சாலை­களில் சைக்­கிள் ஓட்­டு­வது தொடர்­பில் வாகன ஓட்­டு­நர்­க­ளி­டம் இருந்­தும் சைக்­கி­ளோட்­டி­க­ளி­டம் இருந்­தும் எழுந்­துள்ள அக்­க­றை­களை அர­சாங்­கம் கவ­னித்­த­தைத் தொடர்ந்து மறு­ஆய்வு முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

சைக்­கிளை ஓட்ட உரி­மம் அறி­மு­கம் செய்­வ­தில் உள்ள நேர்­மறை, எதிர்­மறை அம்­சங்­க­ளைப் பரி­

சீ­லிக்க இருக்­கும் குழு அதற்­காக பிற நாடு­க­ளின் நடை­மு­றை­களை ஆரா­யும்.

அதி­க­மான சைக்­கி­ளோட்­டி­

க­ளைக் கொண்ட நெதர்­லாந்து போன்ற நாடு­களில் சைக்­கிள் ஓட்­டு­வ­தற்கு உரி­மம் வழங்­க­வில்லை என்­றும் அவற்­றுக்கு அங்கு பதிவு தேவைப்­ப­டு­வ­தில்லை என்­றும் திரு சீ குறிப்­பிட்­டார்.

"இருப்­பி­னும் அதை ஒரு யோச­னை­யாக குழு கவ­னிக்­கும். மறு ஆய்வு செய்­யும்­போது நியா­ய­மான, சரி­ச­ம­மான நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­று­வது அவ­சி­யம்.

"கார­ணம், சைக்­கி­ளோட்­டத்தை மட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் கவ­னக்­கு­றை­வான அம்­சங்­கள் எது­வும் இடம்­பெற்று விடக்­கூ­டாது," என்று நேற்று அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

மறு­ஆய்­வுக் குழு­வில் இடம்­பெற இருக்­கும் சில உறுப்­பி­னர்­க­ளைச் சந்­தித்த பின்­னர் இந்த விவ­ரங்­களை அவர் வெளி­யிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் போக்­கு­வ­ரத்­துக்­கான ஒட்­டு­மொத்த பசு­மைத் திட்­டத்­தில் சைக்­கி­ளோட்­டம் என்­பது முக்­கி­ய­மான அம்­ச­மா­கத் தொட­ர் ­கிறது என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

அதே நேரம் மேலும் மேலும் பலர் சைக்­கி­ளோட்­டத்­தில் ஈடு­

ப­டும்­போது பாது­காப்­பாக இத­னைச் செயல்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மா­கிறது என்­றும் திரு சீ கூறி­னார்.

சைக்­கிள் தொடர்­பான விபத்­து­க­ளைக் குறைக்க சைக்­கிள்­

க­ளுக்­கான சிறப்­புப் பாதை கட்­ட­மைப்பை விரி­வு­ப­டுத்­து­வது ஒரு முக்­கிய நட­வ­டிக்கை என்­றார் அவர்.

மேலும் இது தொடர்­பாக பொது­மக்­க­ளுக்கு விழிப்­பூட்­டு­வ­தும் சாலை ஒழுக்­கத்தை மேம்­ப­டுத்­து­வ­தும் முக்­கி­யம் என்­றும் அமைச்­சர் சீ குறிப்­பிட்­டார்.