மே 4ல் இரு பிரதமர்கள் சந்திப்பு

அடுத்த மாதம் 4ஆம் தேதி­யன்று மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின் சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொண்டு பிர­த­மர் லீ சியன் லூங்­கைச் சந்­தித்­துப் பேச இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர்-மலே­சியா எல்லை யை மீண்­டும் திறப்­பது உட்­பட மற்ற விவ­கா­ரங்­கள் குறித்­தும் இரு­நா­டு­க­ளின் தலை­வர்­கள்

பேச்­சு­வார்த்தை நடத்­து­வர் என்று மலே­சிய வெளி­யு­றவு அமைச்­சர் ஹிஷா­மு­தீன் உசேன் தெரி­வித்­தார். கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக சிங்­கப்­பூ­ருக்­கான மலே­சி­யத் தூதரை அனுப்பி வைப்­ப­தில் சிர­மம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் கடந்த ஓராண்­டாக அப்­ப­த­வி­யில் யாரும் இல்லை என்­றும் அமைச்­சர் ஹிஷா­மு­தீன் கூறி­னார்.

இருப்­பி­னும், சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான உறவு எப்­போ­தும் போல் சீராக இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

இதற்கிடையே, சிங்­கப்­பூ­ரு­ட­னான எல்­லையை அடுத்த இரண்டு மாதங்­க­ளுக்­குள் திறக்க வேண்­டும் என்று ஜோகூர் மாநில அரசு விருப்­பம் தெரி­வித்­துள்­ளது.

ஆனால் அதற்கு முன்பு சிங்­கப்­பூ­ரின் அனு­ம­தியை மலே­சியா பெற வேண்­டும் என்று திரு ஹிஷா­மு­தீன் கூறி­னார்.

"எல்­லையை மீண்­டும் திறப்­பது குறித்து தொடர்ந்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டு­கிறது. அண்­மை­யில் சிங்­கப்­பூ­ரின் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் மலே­சி­யா­வுக்கு வந்­தி­ருந்­தார். எல்­லையை மீண்­டும் திறப்­பது குறித்து அவ­ரு­டன் கலந்­து­ரை­யா­டி­னோம். பிர­த­மர் முகை­தீன்-பிர­த­மர் லீ இடை­யி­லான சந்­திப்­பின்­போது எல்­லைத் திறப்பு பற்­றிய கலந்­து­ரை­யா­டல் முக்­கிய இடம்­பெ­று­வது உறுதி செய்­யப்­படும்," என்­றார் திரு ஹிஷா­மு­தீன்.

கடந்த மாதம் 23ஆம் தேதி­யன்று வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் மலே­சி­யா­வுக்­குச் சென்­றி­ருந்­த­போது திரு ஹிஷா­மு­தீ­னைச் சந்­தித்­துப் பேசி­னார்.

அந்­தந்த நாடு­க­ளின் தடுப்­பூசி சான்­றி­தழ்­களை ஏற்று சிங்­கப்­பூர்-மலே­சியா இடையே இரு­வ­ழிப் பய­ணத்­துக்கு ஏற்­பாடு செய்ய சந்­திப்­பின்­போது அமைச்­சர்­கள் இரு­வ­ரும் இணங்­கி­னர். தற்­போது நடப்­பில் உள்ள இரு­

வ­ழிப் பய­ணப் பாதை, அவ்­வப்­போது பய­ணம் செய்­யும் ஏற்­பாடு ஆகி­ய­வற்­று­டன் மற்ற பய­ணக் குழுக்­களும் படிப்­ப­டி­யாக இரு­நா­டு­க­ளுக்­கி­டையே பயணம் செய்­யும் வழி­மு­றை­களை வகுக்க இரு அமைச்­சர்­களும் இணங்­கியதாக தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!