இந்தியாவில் கிருமித்தொற்று புதிய உச்சம்

இந்தியாவில் கிருமித்தொற்று புதிய உச்சம்

1 mins read
22c66d1c-624e-4c41-8ee3-4048321e22cf
மும்பையில் உள்ள ரயில் நிலையத்தில் கிருமித்தொற்றுப் பரிசோதனைக்காக காத்திருக்கும் பயணிகள். படம்: ஏஎஃப்பி -

இந்தியாவில் புதிய உச்சமாக நேற்று (ஏப்ரல் 14) வரையிலான 24 மணி நேரத்தில் 184,372 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் ஒரே நாளில் 1,027 பேர் கிருமித்தொற்றால் இறந்துவிட்டனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 13.9 மில்லியனாகவும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 172,085 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து 35வது நாளாக கொரோனா பாதிப்பு சீராக அதிகரித்து வந்துள்ளது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 9.84 விழுக்காட்டினர், அதாவது 1,365,704 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கும்பமேளாவின் மூன்றாவது நாளான நேற்று பல நூறாயிரம் பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடத் திரண்டனர்.

பக்தர்கள் முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் அரிதாகவே காண முடிவதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.

கும்பமேளா இடம்பெறும் ஹரித்துவார் மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு நாள்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டோரை கொரோனா பாதித்துவிட்டதாக அரசுத் தரவுகள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
இந்தியாகொரோனாகிருமித்தொற்று