காவல் அதிகாரியே கொள்ளையடித்தார்

காவல் அதிகாரியே கொள்ளையடித்தார்

1 mins read
8bc8ea07-c18a-471a-ba3d-fe0fbe9179c2
மஹாடி முகம்மது முக்தார் எழுதிய மிரட்டல் வாசகம் அடங்கிய துண்டுச்சீட்டும் கொள்ளைச் சம்பவத்தின்போது அவர் வசமிருந்த துப்பாக்கியும். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சிங்கப்பூர் போலிஸ் படை -
multi-img1 of 2

பொதுமக்களையும் அவர்தம் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவரே மிரட்டி, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாடி முகம்மது முக்தார், 38, எனும் 'ஏட்டோஸ்' துணை காவல் அதிகாரி இம்மாதம் 12ஆம் தேதி பிற்பகலில் ஜூரோங் கேட்வே சாலையில் உள்ள கடன் வழங்கும் நிறுவனமொன்றில் தமது திட்டத்தை அரங்கேற்றி, $24,000க்கும் அதிகமான பணத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தின்போது மஹாடி துப்பாக்கி வைத்திருந்ததாகவும் ஆனால் கொள்ளையின்போது அதுகுறித்து அவர் வாய்திறக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மஹாடி மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. சிங்கப்பூரில் துப்பாக்கியுடன் கூடிய கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்திருப்பது கடந்த 15 ஆண்டுகளில் இதுவே முதன்முறை.