மூன்றாவது தடுப்பூசி தேைவப்படக்கூடும்: ஃபைசர் நிறுவனம்

மூன்றாவது தடுப்பூசி தேைவப்படக்கூடும்: ஃபைசர் நிறுவனம்

3 mins read

கொவிட்-19 தடுப்­பூ­சியை ஆரம்பக் கட்டத்தில் போட்­டுக்­கொண்­ட­வர்

­க­ளுக்கு ஒன்­ப­தா­வது மாதம் முதல் 12வது மாதத்­திற்­குள் மேலும் ஓர் ஊசி போடு­வ­தற்­கான சாத்­தி­யத்­திற்கு அமெ­ரிக்கா ஆயத்­த­மாகி வரு­வ­தாக வெள்ளை மாளிகை தெரி­வித்து உள்­ளது.

தடுப்­பூ­சியை முழு­மை­யாக எடுத்­துக்­கொண்ட பின்­னர் நோய் எதிர்ப்பு சக்தி உரு­வா­கும் காலம் குறித்து இன்­னும் ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தால் நோய் எதிர்ப்புக்கான துணை ஊசி ஒன்று தேவைப்­ப­ட­லாம் என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னின் கொவிட்-19 முறியடிப்புக் குழு­வில் இடம்­பெற்று உள்ள தலைமை அறி­வி­யல் அதி­காரி டேவிட் கெஸ்­லர் தெரி­வித்து உள்­ளார்.

இந்த கூடு­தல் தடுப்­பூசியை எளி­தில் பாதிப்­ப­டை­யக் கூடி­ய­

வ­ர்களுக்குப் போட­லாமா என்­பது குறித்து ஆரம்­ப­கட்ட ஆராய்சி அமைந்­துள்­ள­தாக அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே, இரு தடுப்­பூ­சி­

க­ளை­யும் போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு ஆறு மாதம் முதல் 12 மாதம் வரையிலான காலத்­திற்­குள் மூன்­றா­வது கொவிட்-19 ஊசி தேவைப்­ ப­ட­லாம் என்று ஃபைசர் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி ஆல்­பர்ட் பௌர்லா கூறி­யுள்­ளார்.

இவற்­றுக்­குப் பிறகு ஆண்­டு­தோ­றும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் நிலைமை கூட ஏற்­ப­ட­லாம் என்று சிஎன்­பிசி செய்தி நிறு­வ­னத்­தி­டம் அவர் கூறி­னார். அவர் இந்­தக் கருத்தை ஏப்­ரல் 1ஆம் தேதி தெரி­வித்­தி­ருந்­தா­லும் வியா­ழக்­

கி­ழமை தான் அது வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.

ஃபைசர் பயோ­என்­டெக், மொடர்னா ஆகிய தடுப்­பூ­சி­கள் குறைந்­த­பட்­சம் ஆறு மாதங்­க­ளுக்கு நோய்க்கு எதி­ரான தடுப்­பாற்­ற­லைப் பெற்­றி­ருக்­கும் என்று ஆரம்­ப­கட்ட தர­வு­கள் குறிப்­பிட்டு இருந்­தன. இருப்­பி­னும் அதி­க­பட்­ச­மாக அந்த ஆற்­றல் எத்­தனை காலத்­துக்கு நீடிக்­கும் என்று இன்­னும் கணிக்­கப்­ப­ட­வில்லை.

ஆறு மாதங்­க­ளைக் கடந்து பாது­காப்பு நீடித்­தா­லும் விரை­வா­கப் பர­வக்­கூ­டிய மாற்று வகை கொரோனா கிரு­மி­கள், இனி­மேல் உரு­வாக்­கூ­டிய கிரு­மி­கள் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக ஆண்­டு­தோ­றும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் நிலைமை வர­லாம் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

வரு­டாந்­திர சளிக்­காய்ச்­ச­லுக்கு எதி­ரான தடுப்­பூசி போன்­ற­தாக இது இருக்­கக்­கூ­டும் என்­றும் அவர்­கள் தெரி­வித்து உள்­ள­னர்.

இந்­தக் கருத்­து­கள் நிலவி வரும் வேளை­யில் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­படும் சம்­ப­வங்­கள் மீது அமெ­ரிக்கா கவ­னம் செலுத்­தத் தொடங்கி இருப்­ப­தாக அமெ­ரிக்க நோய் கட்­டுப்­பாடு, தடுப்பு நிலை­யத்­தின் இயக்­கு­நர் ரோச்­செல் வாலென்ஸ்கி கூறி­யுள்­ளார்.

அமெ­ரிக்­கா­வில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 77 மில்­லி­யன் மக்­களில் 5,800 பேருக்கு தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

அவர்­களில் 396 பேருக்கு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை தேவைப்­பட்­ட­தா­க­வும் 74 பேர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் திரு வாலென்ஸ்கி தெரி­வித்­துள்­ளார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சில­ரி­டம் வலு­வான நோய் எதிர்ப்­புத்­தி­றன் இல்­லா­த­தால் இது­போன்ற சம்­ப­வங்­கள் நிகழ்ந்து வரு­வ­தாக அவர் சொன்­னார்.

ஃபைசர் நிறு­வ­ன­மும் அதன் பங்­காளி நிறு­வ­ன­மான பயோ­என்­டெக்­கும் தங்­க­ளது முதற்கட்ட தடுப்­பூசி 91 விழுக்­காடு கொவிட்-19 தடுப்­பாற்­றல் கொண்­டது என்று இம்­மா­தத் தொடக்­கத்­தில் கூறி இருந்­தன.

12,000க்கும் மேற்­பட்­டோர் குறைந்­த­பட்­சம் ஆறு மாத காலத்­திற்கு தடுப்­பூசி எடுத்­துக்­கொண்­ட­வர்­கள் உட்­ப­டுத்­திய தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் அவை அத­னைக் கூறி இருந்­தன.

இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் ஆறு மாதங்கள் வரை 95 விழுக்காட்டுக்கு மேல் தடுப்பாற்றல் கிடைக்கக்கூடும் என்று அந்த நிறுவனங்கள் கூட் டாகத் தெரிவித்து இருந்தன.