இந்தியாவில் மேலும் 234,692 பேருக்கு கொவிட்-19

இந்தியாவில் மேலும் 234,692 பேருக்கு கொவிட்-19

2 mins read

நேற்­றைய நில­வ­ரப்­படி இந்­தி­யா­வில் மேலும் 234,692 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு அறி­வித்­தது.

கடந்த ஒன்­பது நாட்­களில் இதுவே ஆக அதி­க­மான அன்­றா­டப் பதி­வா­கும்.

இதன்­மூ­லம் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் மொத்த எண்­ணிக்கை 14.5 மில்­லி­ய­னைத் தாண்­டி­யுள்­ளது.

கொவிட்-19 கார­ண­மாக மேலும் 1,341 பேர் மாண்­டு­விட்­ட­தாக நேற்று உறுதி செய்­யப்­பட்­டது.

இந்­தி­யா­வில் இது­வரை 175,649 பேர் கொரோனா கார­ண­மாக உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

கடந்த 38 நாட்­க­ளாக இந்­தி­யா­வில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது.

இத­னால் மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கைக்­கான பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது.

இரண்டு நோயா­ளி­க­ளுக்கு ஒரு படுக்கை எனும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. தேசிய அள­வி­லான குண­ம­டை­யும் விகி­தம் 87.23 விழுக்­காட்­டுக்­குக் குறைந்­துள்­ளது.

குண­ம­டைந்து வசிப்­பி­டம் திரும்­பி­யோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் இறப்பு விகி­தம் குறைந்­துள்­ள­தா­க­வும் இந்­திய சுகா­தார அமைச்­சின் வெளி­யிட்ட தர­வு­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி­யன்று இந்­தி­யா­வில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை இரண்டு மில்­லி­ய­னைத் தாண்­டி­யது.

ஆகஸ்ட் 23ல் மூன்று மில்­லி­யனை அது தாண்­டி­யது.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தில் நான்கு மில்­லி­ய­னை­யும் செப்­டம்­பர் 16ல் ஐந்து மில்­லி­ய­னை­யும் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை தாண்­டி­யது.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் 19ஆம் தேதி­யன்று பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 10 மில்­லி­ய­னைத் தாண்­டி­யது.

இதற்­கி­டையே, இந்­துக்­க­ளின் முக்­கிய சமய நிகழ்­வு­களில் ஒன்­றான கும்ப மேள விழா இம்­முறை அடை­யாள பங்­கேற்­பாக இருக்­கட்­டும் என்று இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி பக்­தர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

இந்த சமய நிகழ்வை முன்­னிட்டு கடந்த சில நாட்­க­ளாக கங்கை நதி கரை­யோ­ரம் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் கூடி­னர்.

கொரோனா மிக வேக­மா­கப் பர­வி­வ­ரும் நிலை­யில், முகக்­க­வ­சம் ஏது­மின்றி, சமூக இடை­வெளி விதி­மு­றை­யைக் கடைப்­பி­டிக்­கா­மல் பக்­தர் கூட்­டம் அலை­மோ­து­வதை இந்­திய அர­சாங்­கம் தடுக்­க­வில்லை என்று மிகக் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டது.

கும்ப மேள விழா­வில் பெருந்­தி­ர­ளா­கக் கூட வேண்­டாம் என பிர­த­மர் மோடி அழைப்பு விடுத்­ததை அடுத்து, அதி­க­மா­னோர் ஒரே இடத்­தில் ஒன்­று­கூட வேண்­டாம் என இந்து சம­யத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுவாமி அவ்­தே­ஷா­னந்த் பக்­தர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

அண்­மை­யில் சில மாநி­லங்­களில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடத்­தப்­பட்­டது. பிர­சா­ரக் கூட்­டங்­க­ளைக் காண பெருந்­தி­ர­ளா­கக் கூடிய மக்­கள் பலர் பாது­காப்பு விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­ற­வில்லை என்­றும் கொரோனா அதி­க­ரிப்­புக்கு அது­வும் ஒரு கார­ண­மாக இருக்­கக்­கூ­டும் என்­றும் குறை­கூ­றப்­ப­டு­கிறது.