தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிளார்க் கீ அருகே ஆடவர்களின் சடலம் மீட்பு

1 mins read
cc15a99c-c421-434d-b51e-8f2ddfb5b650
-

சிங்கப்பூர் ஆற்றிலிருந்து இன்று அதிகாலை இரண்டு ஆடவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாண்ட அந்த இரண்டு ஆடவரில் ஒருவருக்கு 26 வயது, மற்றொருவருக்கு 28 வயது.

6 இயூ டொங் சென் ஸ்திரீட்டுக்கு அருகே இரண்டு பேர் மூழ்கியதாக போலிசாரிடம் அதிகாலை 1.57 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட அதே நேரத்தில் இது குறித்த தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

காணாமல் போனோருக்கான எந்த அறிகுறியும் அங்கு வந்த அதிகாரிகளுக்குத் தென்படவில்லை. குடிமைத் தற்காப்பு படையின் பேரிடர் உதவி, மீட்புக் குழுவின் முக்குளிப்பாளர்கள் நீருக்குள் சென்று அந்த உடல்களை மீட்டனர். அவ்விரு ஆடவர்கள் உயிரிழந்ததாக சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.

விசாரணை தொடர்கிறது.