தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தவறு செய்த சைக்கிளோட்டிகளைப் பிடித்தது எல்டிஏ

1 mins read
70cb07e4-4dc0-44bd-8034-04e97fe05586
-

இரு நாட்டுகளுக்கு மட்டும் நீடித்த சோதனை நடவடிக்கையில், சாலைகளில் விதிமுறை மீறிய 34 சைக்கிளோட்டிகள் பிடிப்பட்டனர். தவறு செய்யும் சைக்கிளோட்டிகளைப் பற்றிய புகார்கள் வெளிவந்த பிறகு இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.

போக்குவரத்து போலிசுடன் தான் நடத்திய சோதனை நடவடிக்கையில் அந்த 34 சைக்கிளோட்டிகள் பிடிக்கப்பட்டதாக நிலப்போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) தெரிவித்தது. ஆயர் ராஜா விரைவுச்சாலை, வெஸ்ட் கோஸ்ட் ஹைவே, புக்கிட் தீமா மற்றும் தானா மேரா கோஸ்ட் ரோடு சாலைகளில் இந்தச் சோதனைக்காக அதிகாரிகள் அனுப்பப்பட்டதாக நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

தலைக்கவசம் இன்றி சைக்கிளை ஓட்டிய 16 சைக்கிளோட்டிகள் பிடிபட்டதாக நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. மேலும் 16 பேர், போக்குவரத்து விளக்கு சிவப்பு மின்னியபோது அதனைப் பொருட்படுத்தாமல் போனதாகவும் இருவர் போக்குவரத்திற்கு எதிர்த்திசையாக ஓட்டியதாகவும் தெரிவித்தது.

அதிகமானோர் சைக்கிள் ஓட்டுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஆணையம் அதே நேரத்தில் சாலைப் பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்படவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. சைக்கிளோட்டிகள் பிறரைப் பற்றியும் எண்ணி பரிவுடன் இருக்கும்படி ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.