கிருமித்தொற்று இருமடங்காகியது

கிருமித்தொற்று இருமடங்காகியது

3 mins read

இந்­தி­யா­வில் கொவிட்-19 கிருமி தொற்­றி­யோ­ரின் விகி­தாச்­சா­ரம் கடந்த 12 நாட்­களில் இரண்டு மடங்­காகி 16.69 விழுக்­காட்டை எட்­டி­விட்­டது என்று அர­சாங்­கம் அறி­வித்து இருக்­கிறது.

இந்த நிலை­யில், மருத்­து­வ­மனை­களில் படுக்­கை­கள் இல்லை என்­றும் ஆக்­சி­ஜன் அறவே போத­வில்லை என்­றும் உட­ன­டி­யாக உத­வும்படி­யும் டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் அப­யக்­குரல் எழுப்பி மத்­திய அர­சுக்கு அவ­சர கோரிக்கை விடுத்துள்ளார்.

புது­டெல்லி நில­வ­ரம் மிக­வும் மோச­ம­டைந்­து­விட்­டது என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார். புதி­தாக 24 மணி நேரத்­தில் அங்கு 24,345 பேருக்குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தா­க­வும் தொற்று விகி­தம் டெல்­லி­யில் 24.56 விழுக்­கா­டாக இருக்­கிறது என்­றும் அவர் அபா­யச்­சங்கு ஊதி இருக்­கி­றார்.

புது­டெல்­லி­யில் உள்ள அரசு­மருத்­து­வ­ம­னை­களில் இருக்­கும் 10,000 படுக்­கை­களில் 7,000 படுக்கை­களை கொவிட்-19 நோயாளி­க­ளுக்கு ஒதுக்­கும்­படி அவர் கேட்­டுக்­கொண்டுள்ளார்.

இதனி­டையே, சத்­தீஸ்­கர் மாநி லத்­தின் ராய்­ப்பூர் நகரில் செயல் படும் கொவிட்-19 மருத்­து­வ­மனை ஒன்­றில் திடீ­ரென தீ விபத்து நிகழ்ந்­த­தில் ஐந்து நோயா­ளி­கள் மாண்டு­விட்­ட­தா­க­வும் புலன்­வி­சா­ரணை நடத்த உட­ன­டியாக உத்­த­ர­வி­டப்­பட்டு இருப்­ப­தா­க­வும் அம் மாநில போலிஸ் அறி­வித்தது.

இந்­தி­யா­வில் கொரோனா இரண்­டாம் அலை, முதல் அலை யை­விட மோச­மாக இருக்­கிறது என்று அதி­கா­ரி­களும் வல்லு­நர்­களும் அபாயச்சங்கு ஊதி வரு கி­றார்­கள்.

சென்ற ஆண்­டைப் போல் அல்­லா­மல் இப்­போது இளை­ஞர்­களும் சிறார்­களும் அதி­கம் பாதிக்­கப்­படு­வ­தாக மருத்­து­வ­மனை வட்­டா­ரங்­கள் தெரி­வித்து வரு­கின்­றன. ஒரே நாளில் இது­வரை இல்­லாத அள­வுக்கு 2.61 லட்­சம் பேருக்குப் புதி­தாக கிருமி தொற்றி­விட்­டது என்று நேற்று மத்­திய அர­சு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

24 மணி நேரத்­தில் 1,501 பேர் மாண்­டு­விட்­டார்­கள். கொரோனா கிருமி கார­ண­மாக இந்­தி­யா­வில் மொத்­தம் 177,150 பேர் பலி­யாகி இருக்­கி­றார்­கள்.

சனிக்­கி­ழமை இரவு 8 மணி நில­வ­ரப்­படி நாட்­டில் மொத்­தம் 122.5 மில்­லி­யன் மக்­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்டு இருக்­கிறது. அவர்­களில் 16.1 மில்லி­யன் பேர் இரண்­டா­வது தடவை­யாக அந்த ஊசி­யைப் போட்டுக்கொண்­டுள்­ள­னர்.

சென்ற ஆண்­டில் கொவிட்-19 முதல் அலை கடு­மை­யாக இருந்த ஜூன் மாதத்­தில் 100 பேருக்கு 5.5 பேர் என்ற அள­வில் மட்­டுமே தொற்று இருந்­தது. ஆனால் இப்­போது இந்த விகி­தாச்­சா­ரம் சரா சரியாக 7.6% ஆக அதி­க­ரித்து இருக்­கிறது என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

நாட்­டில் கொவிட்-19 கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 14.8 மில்­லி­ய­னைக் கடந்­து­விட்­டது. 12.8 மில்­லி­யன் பேர் அந்­தத் தொற்­றில் இருந்து முற்­றி­லும் குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள்.

இந்தியாவில் கடந்த 39 நாட்­களாக தொற்று தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. கிரு­மித்­தொற்­றில் இருந்து குண­ம­டை­வோ­ரின் விகி­தாச்­சா­ர­ம் 86.6 விழுக்­கா­டா­கக் குறைந்து இருக்­கிறது.

மகா­ராஷ்­டிரா, டெல்லி, சத்­தீஸ்­கர், உத்­த­ரப்­பி­ர­தே­சம், குஜ­ராத் மாநி­லங்­களில் மரண எண்ணிக்கை அதி­கம் இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இந்­நி­லை­யில், முன்­னாள் பிர­த­மர் மன்­மோ­கன் சிங், பல யோச­னை­கள் அடங்­கிய கடி­தத்தை பிர­த­ம­ருக்கு அனுப்பி இருக்­கி­றார். தடுப்­பூசித் திட்­டத்தை விரை­வுப்­படுத்­தும்­படி அவர் அதில் கேட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்.

இத­னி­டையே, இந்­திய மக்­களில் ஏறத்­தாழ 65 விழுக்­காட்­டி­ன­ருக்கு வயது 35க்கும் குறைவு என்­ப­தால் இளை­யர்­கள் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கக்கூடிய வாய்ப்பு அதி­கம் இருக்­கும் என்ற கவலை கூடி வரு­கிறது.

புது­டெல்­லி­யில் புதிய நோயாளி­களில் ஏறத்­தாழ 65 விழுக்­காட்டி­ன­ருக்கு வயது 45க்கும் குறைவு என்று முதல்­வர் கெஜ்­ரி­வால் கூறி இருக்­கி­றார்.

இரண்­டா­வது கொரோ­ன­ா அலை அடிக்­கும் இந்­தக் காலத்­தில் 12 வய­துக்கு குறைந்த சிறார்­கள்கூட மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வதைக் காண முடி­வ­தாக மருத்­து­வர்­கள் கூறு­கி­றார்­கள். சென்ற ஆண்டு நில­வரம் இப்­படி இல்லை என்றும் இரண்டாவது அலை பாதிப்புகள் இன்னும் மோசமாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.

இந்தியா: 12 நாட்களில் தொற்று 16.69%; டெல்லி முதல்வர் அபயக்குரல்; மருத்துவமனை தீயில் ஐவர் பலி