கிளார்க் கீ அருகே சிங்கப்பூர் ஆற்றில் இரு உடல்கள்; அதிகாரிகள் விசாரணை

கிளார்க் கீ அருகே சிங்கப்பூர் ஆற்றில் இரு உடல்கள்; அதிகாரிகள் விசாரணை

2 mins read
7eb81693-2e50-4935-a0a4-8ee56b959f2e
சிங்கப்பூர் ஆற்றில் இருந்து நேற்று இரண்டு ஆடவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. படங்கள்: ஃபேஸ்புக் -

சிங்­கப்­பூர் ஆற்­றில் இருந்து நேற்று காலை நேரத்­தில் இரண்டு ஆட­வர்­க­ளின் உடல்­கள் மீட்­கப்­பட்­டன. அந்த ஆட­வர்­க­ளுக்கு வயது 26 மற்­றும் 28 என்று தெரி­ந்தது.

கிளார்க் கீ சென்ட்­ரல் பகு­தி­யில் 6 யூ தோங் சென் ஸ்தி­ரீட்­டுக்கு அருகே யாரோ ஆற்­றில் மூழ்­கி­விட்­டார்­கள் என்று சந்­தேகிக்கப்படுவதாக போலி­சா­ருக்கு நேற்று அதி­காலை 1.57 மணிக்குத் தகவல் கிடைத்­தது.

அதி­காலை ஏறத்­தாழ 2 மணிக்கு ஆற்றில் மீட்புப் பணியில் ஈடுபட­வேண்­டும் என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்கு அழைப்பு வந்­த­தாக அந்­தப் படை­யின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

சம்­பவ இடத்­துக்கு விரைந்து சென்ற அதி­கா­ரி­கள் அங்கு யாரை­யும் காண வில்லை.

குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் பேரி­டர் உதவி மற்­றும் மீட்­புக் குழு­வைச் சேர்ந்த முக்­கு­ளிப்­பா­ளர்­கள் ஆற்­றின் உள்ளே தேடு­தல் முயற்­சியை மேற்­கொண்­டார்­கள்.

தொலை­தூ­ரத்­தில் இருந்து கட்­டுப்­படுத்­தப்­படும் சாத­னத்­தின் உத­வி­யா­லும் ஆற்­றில் தேடு­தல் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. தண்­ணீ­ருக்­குக் கீழே உள்ள காட்சி­களைத் தோற்ற வடி­வில் எடுத்­துக்­காட்­டும் சாத­னம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

இத்­த­கைய சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தால் முக்­கு­ளிப்­பா­ளர்­க­ளுக்குத் தண்­ணீ­ரின் ஆழ்­ப­கு­தி­யில் ஆபத்து நிகழ்­வதைத் தவிர்க்­க­லாம் என்­றும் தேடு­தல் முயற்­சி­களுக்கு ஆகும் நேர­மும் குறை­யும் என்றும் இந்­தப் படை­யின் பேச்­சா­ளர் ஒரு­வர் விளக்­கி­னார்.

முக்­கு­ளிப்­பா­ளர்­கள் ஓர் உடலை அதி­காலை ஏறத்­தாழ 4 மணிக்­கும் மற்­றோர் உடலை விடி­காலை ஏறத்­தாழ 5.45 மணிக்­கும் மீட்­ட­னர். அந்த இரண்டு ஆட­வர்­களும் மர­ண­ம­டைந்­து­விட்­ட­தாக சம்­பவ இடத்­தில் தற்­காப்­புப் படை மருத்­துவ அதி­கா­ரி­கள் அறி­வித்­த­னர்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யின் அடிப்­படை­யில் பார்க்­கை­யில், இந்­தச் சம்­ப­வத்­தில் சூது ஏதும் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை என்றும் புலன்விசாரணை தொடர்ந்து நடப்பதாகவும் போலிஸ் பேச்சா ளர் ஒருவர் கூறினார்.