டெல்லியில் முழு ஊரடங்கு அமல்

டெல்லியில் முழு ஊரடங்கு அமல்

3 mins read

இந்தியா: நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் கொவிட்-19 தொற்று; மொத்த பாதிப்பு 15 மில்லியனைக் கடந்தது

இந்­தி­யா­வில் கொவிட்-19 இரண்­டாம் அலை வீசி­வ­ரும் நிலை­யில், அத­னால் பாதிக்­கப்­ப­டு­வோர், மர­ண­ம­டை­வோர் எண்­ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்­சத்தை எட்டி வரு­கிறது.

அந்­நாட்­டில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 273,810 பேர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக நேற்­றுக் காலை 8 மணிக்கு மத்­திய சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது. கிரு­மித்­தொற்­றால் மேலும் 1,619 பேர் இறந்­து­விட்­ட­னர். இதை­ய­டுத்து, ஒட்­டு­மொத்த பாதிப்பு 15,061,919 ஆக­வும் மரண எண்­ணிக்கை 178,769 ஆக­வும் அதி­க­ரித்­தது.

கிட்­டத்­தட்ட 13 மில்­லி­யன் பேர் தொற்­றி­லி­ருந்து மீண்­டு­விட்ட நிலை­யில், இப்­போது 1.9 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இத­னி­டையே, தலை­ந­கர் டெல்லி­யில் இதற்­கு­முன் இல்­லாத வகை­யில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 25,462 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னது.

இதை­ய­டுத்து, கொரோனா பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக நேற்று இரவு அங்கு முழு ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. வரும் திங்­கட்­கி­ழமை காலை­வரை அங்கு ஊர­டங்கு நடப்­பில் இருக்­கும். இந்த ஆறு நாள்­களில் அத்­தி­யா­வ­சிய சேவை­கள் மட்­டுமே செயல்­பட அனு­ம­திக்­கப்­பட்­டு உள்ளது.

இப்­போது ஊர­டங்கை அறி­விக்­கா­வி­டில் பேர­ழிவை எதிர்­கொள்ள நேரி­டும் என்று டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

டெல்லி மருத்­து­வ­ம­னை­களில் தீவிர சிகிச்­சைப் பிரி­வுப் படுக்­கை­கள் அனைத்­தும் கிட்­டத்­தட்ட நிரம்­பி­விட்­ட­தா­க­வும் உயிர்­வளி (ஆக்­சி­ஜன்) விநி­யோ­கம் மிக­வும் குறை­வாக இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இது ஒரு 'சிறி­ய­ள­வி­லான முடக்­க­நிலை' என்ற அவர், புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­கள் டெல்­லி­யை­விட்டு வெளி­யேற வேண்­டாம் என்­றும் கேட்­டுக்­கொண்­டார்.

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தி­லும் கொரோனா பர­வல் தீவி­ர­ம­டைந்­துள்­ளதை அடுத்து, இரவு 10 மணி முதல் அதி­காலை 4 மணி­வரை­யும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யில் முழு ஊர­டங்­கும் அறி­விக்­கப்­பட்­டு உள்­ளது. இர­வு­நேர ஊர­டங்­கின்­போது பொது, தனி­யார் போக்­கு­வரத்துக்கு அனுமதியில்லை.

அதே­போல, பீகார் மாநி­லத்­திலும் இரவு 9 மணி முதல் அதி­காலை 5 மணி­வரை ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்டுள்ளது. அடுத்த மாதம் 15ஆம் தேதி அங்கு கல்வி நிலை­யங்­களும் சம­யத் தலங்­களும் மூடப்­பட்­டி­ருக்­கும்.

பிர­த­மர் அவ­சர ஆலோ­சனை

கிரு­மிப் பர­வல் மிக மோச­ம­டைந்­துள்­ளதை அடுத்து, பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று பல்­வேறு தரப்­பி­ன­ரு­டன் ஆலோ­சனை மேற்­கொண்­டார்.

முற்­ப­கல் 11.30 மணி­ய­ள­வில் பிர­த­மர் மோடி தலை­மை­யில் முதல் கூட்­டம் இடம்­பெற்­றது. மாலை 4.30 மணி­ய­ள­வில் நாட்­டின் முன்­னணி மருத்­து­வர்­க­ளு­ட­னும் அதன்­பின் மாலை 6 மணிக்கு முன்­னணி மருந்து தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளு­ட­னும் காணொளி வழி­யாக ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

உயிர்வளி பற்றாக்குறையை அடுத்து, மருத்துவம் உள்ளிட்ட ஒன்பது துறைகளுக்கு 'ஆக்சிஜன் சிலிண்டர்' விநியோகம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

20 நோயாளிகள் தப்பியோட்டம்

இதனிடையே, உத்தராகண்ட் மாநிலம், டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளிகள் 20 பேர் தப்பியோடிவிட்டனர். அவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தபோது கிருமி தொற்றிவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இத­னி­டையே, இன்று முதல் இரு வாரங்­க­ளுக்கு இந்­தியா, பாகிஸ்­தான், பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­களில் இருந்து விமா­னங்­கள் வர ஹாங்­காங் தடை விதித்து உள்­ளது. 'என்501ஒய்' எனும் உரு­மாற்­றக் கிருமி அங்கு கண்­ட­றி­யப்­பட்­ட­தை அடுத்து இந்­த ந­ட­வடிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.