ஒரே நாளில் 295,000 பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 295,000 பேருக்கு கொரோனா

2 mins read
877f66b2-bc5a-43ad-9f91-7d09237f3deb
கொவிட்-19 காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் கணவர் இறந்த செய்தியைக் கேட்டுக் கதறி அழும் மாது. படம்: ராய்ட்டர்ஸ் -

இந்­தி­யா­வில் கொவிட்-19 நெருக்­க­டி­நிலை தொடர்ந்து மோச­ம­டைந்து வரு­கிறது. நேற்­றைய நில­வ­ரப்­படி மேலும் 2,000க்கும் மேற்­பட்­டோர் கொரோனா கார­ண­மாக மாண்­ட­னர். நேற்று ஒரே நாளில் கிட்­டத்­தட்ட 295,000 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. இந்­தி­யா­வில் பாதிப்­ப­டைந்­தோர் மொத்த எண்­ணிக்கை 15,616,130ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இது­வரை மொத்­தம் 182,553 உயி­ரி­ழப்­பு­கள் நிகழ்ந்­துள்­ளன. மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெறு­வோ­ருக்குப் போது­மான பிரா­ண­வாயு (ஆக்­சி­ஜன்) இல்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பிரா­ண­வாயு பற்­றாக்­குறை அபா­ய­நி­லையை எட்­டி­யி­ருப்­ப­தாக இந்­திய மருத்­து­வத் துறை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

அண்­மைய வாரங்­களில் இந்­தி­யா­வில் பெரிய அள­வி­லான பல ஒன்­று­கூ­டல்­கள் நிகழ்ந்­துள்­ளன. அவற்­றில் கும்பமேளா சமய நிகழ்வு, தேர்­தல் பிர­சா­ரங்­கள், ஆடம்­ப­ர­மான திரு­மண விழாக்­கள், இங்­கி­லாந்­துக்கு எதி­ரான கிரிக்­கெட் போட்டி போன்­றவை அடங்­கும்.

சில தொழிற்­சா­லை­களில் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு வழங்­கப்­படும் சில முக்­கிய மருந்­து­க­ளின் உற்­பத்தி முடங்­கி­விட்­ட­தா­க­வும் பிரா­ண­வாயு உற்­பத்தி செய்­யும் ஆலை­களை நடத்த நிறு­வ­னங்­க­ளுக்கு அழைப்பு விடுப்­ப­தி­லும் தாம­தம் ஏற்­பட்­டு­விட்­ட­தா­க­வும் இந்­திய ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளின் உயி­ரைக் காப்­பாற்ற கள்­ளச் சந்தை வாயி­லாக மிக அதிக விலை­யில் மருந்து மற்­றும் பிரா­ண­வா­யுவை வாங்­கும் நிலை உற­வி­னர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வா­லின் மனை­விக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, திரு கெஜ்ரி­வால் நேற்று தம்­மைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்­டார்.

இந்­நி­லை­யில், கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த இந்­தி­யா­வில் உள்ள பல மாநி­லங்­கள் கட்­டுப்­

பா­டு­களை விதித்­துள்­ளன. ஒரு வார முடக்­க­நி­லையை டெல்லி அறி­வித்­துள்­ளது. மகா­ராஷ்­டி­ரா­வில் அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருட்­களை விற்­கும் கடை­கள் மூடப்­பட்­டுள்­ளன. வார­யி­றுதி முடக்­க­நி­லையை

உத்­த­ரப் பிர­தேச அர­சாங்­கம் நடை­மு­றைப்­ப­டுத்த இருக்­கிறது.

இந்­தி­யா­வில் கொவிட்-19 சூழல் மோச­ம­டைந்­தி­ருப்­ப­தா­லும் அங்கு பரவிவரும் இரட்­டிப்பு உரு­மாற்ற கிரு­மி­யா­லும் இந்­தி­யா­வுக்­குப்

பய­ணம் செய்ய வேண்டாம் என்று அமெ­ரிக்கா அதன் குடி­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டது.

இந்­தி­யாவை கொவிட்-19 அபாய நாடு­கள் பட்­டி­ய­லில் பிரிட்­டன் சேர்த்­துள்­ளது.