இந்தியாவின் மகாராஷ்டிரா
மாநிலத்தின் நாசிக் நகரில் பிராணவாயு விநியோகிக்கும் லாரியி
லிருந்து ஸாகிர் உசேன் மருத்துவ
மனையின் சிலிண்டருக்கு பிராணவாயுவை மாற்றும் பணி நடை
பெற்றுக்கொண்டிருந்தபோது கசிவு ஏற்பட்டதில் 22 பேர் உயிர்இழந்தனர். கசிவின் காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கான
பிராணவாயு விநியோகம் ஏறத்தாழ அரை மணி நேரத்துக்குத் தடைபட்டதாக என்டிடிவி செய்தி நிறுவனத்திடம் மாவட்ட ஆட்சியர் சூரஜ் மந்தாரே தெரிவித்தார்.
மாண்ட நோயாளிகள் அனை
வருக்கும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்தது.
ஸாகிர் உசேன் மருத்துவமனையில் கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நிகழ்ந்தபோது கிட்டத்தட்ட 150 நோயாளிகளுக்கு பிராணவாயு வழங்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பிராணவாயு தேவைப்படும் ஏறத்தாழ 31 நோயாளிகள் மற்ற
மருத்துவமனைகளுக்கு இட
மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிராணவாயு கசிவு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிராவின் சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப்பே உறுதி அளித்துள்ளார்.
"எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நோயாளிகள்
மாண்டுவிட்டனர்.
"இந்த நோயாளிகளுக்குத் தேவையான பிராணவாயுவை விநியோகம் செய்யும் லாரியில் கசிவு ஏற்பட்டது.
"பிராணவாயு விநியோகம் தடைபட்டதால் மருத்துவமனையில் இருந்த இந்த நோயாளிகள்
மரணம் அடைந்திருக்கலாம்.
"விசாரணை முடிந்ததும் இதுகுறித்து நாங்கள் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடுவோம்," என்று திரு டோப்பே கூறினார்.
மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்கான பிராணவாயு விநியோகம் தடைபட்டதும் மருத்துவமனை ஊழியர்களும் நோயாளிகளின் குடும்பத்தாரும் பதற்றம் அடைந்ததாக இந்திய ஊடகம் தெரிவித்தது.
மூச்சுத் திணறலால் சிரமப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்கு உதவ பலர் படாதபாடுபட்டதை மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் காட்டின. பிராணவாயு கசிவை நிறுத்த தீயணைப்பு வண்டிகள் மருத்துவமனைக்கு விரைந்தன.
கசிவைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் தண்ணீர் பீய்ச்சியடித்ததாக தெரிவிக்கப்
பட்டது.

