இந்தியாவில் 300,000 பேருக்குமேல் தொற்று; ஒருநாள் பாதிப்பில் உலகிலேயே ஆக அதிகம்

உல­கில் இது­வரை இல்­லாத வகை­யில் இந்­தி­யா­வில் கடந்த 24 மணி நேரத்தில் புதி­தாக 314,835 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது; மேலும் 2,104 பேர் உயி­ரி­ழந்து­விட்­ட­னர். இதை­ய­டுத்து, இந்­தி­யா­வில் மொத்த கொரோனா பாதிப்பு 16 மில்­லி­யனை நெருங்கி இருக்­கிறது; பலி எண்­ணிக்கை 184,657ஆக அதி­க­ரித்­தது.

அமெ­ரிக்­கா­வில் ஒரே நாளில் கிட்­டத்­தட்ட 297,000 பேரை கொரோனா தொற்­றி­யி­ருந்­ததே முந்­திய உச்சம்.

இத­னி­டையே, தேசிய நெருக்­கடி­நிலை போன்­ற­தொரு சூழலை நாடு எதிர்­கொண்­டுள்­ள­தால் கொரோனா பர­வ­லைச் சமா­ளிக்க ஆக்­சி­ஜன், மருந்­துப் பொருள்­கள் விநி­யோ­கம், தடுப்­பூசி நட­வ­டிக்கை, பொது முடக்­கத்தை அறி­விப்­ப­தற்­கான அதி­கா­ரம் போன்­றவை உட்­பட ஒரு தேசிய அள­வி­லான திட்­டத்­தைத் தாக்­கல் செய்­யு­மாறு இந்­திய அர­சுக்கு அந்­நாட்­டின் உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கொவிட்-19 ஆயத்­த­நிலை தொடர்­பில் குறைந்­தது ஆறு உயர் நீதி­மன்­றங்­களில் விசா­ரணை நடந்து வரும் நிலை­யில் உச்ச நீதி­மன்­ற­மும் தானாக முன்­வந்து அதனை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்­டுள்­ளது.

நாடு முழு­வ­தும் ஆக்­சி­ஜன் பற்­றாக்­குறை இருப்­ப­தா­கப் பல மாநி­லங்­களும் கூக்­கு­ரல் எழுப்­பி­வரும் நிலை­யில், இந்­தி­யா­வில் போது­மான அளவு ஆக்­சி­ஜன் உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தா­க­வும் ஆனால் அதை எடுத்­துச்­செல்­வ­தில்­தான் பிரச்­சினை நில­வு­கிறது என்­றும் சொல்லப்படுகிறது.

இதை­ய­டுத்து, இந்­திய விமா­னப் படை­யைப் பயன்­ப­டுத்தி வெளி­நாடு­களில் இருந்து ஆக்­சி­ஜன் கொள்­கலன்­க­ளை­யும் சாத­னங்­களை­யும் இறக்­கு­மதி செய்ய அர­சாங்­கம் திட்­ட­மிட்டு வரு­வ­தாக 'இந்­தியா டுடே' செய்தி கூறு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!