7 அமைச்சுகளுக்கு புதிய தலைமை

7 அமைச்சுகளுக்கு புதிய தலைமை

3 mins read

சிங்­கப்­பூர் அமைச்­ச­ர­வை­யில் நேற்று பெரிய அளவில் மாற்­றம் செய்­யப்­பட்­டது. அதன் விவ­ரங்­களை பிர­த­மர் லீ சியன் லூங் அறி­வித்­தார். அமைச்­ச­ரவை மாற்­றங்­கள் மே 15 முதல் நடப்­புக்கு வரும்.

புதிய அமைச்­ச­ர­வை­யில் நிதி அமைச்­ச­ராக லாரன்ஸ் வோங், 48, இருப்­பார். அவர் வகித்து வந்த கல்­வி அமைச்சை வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங், 51, ஏற்­பார். அவர் கைவி­டும் வர்த்­தக தொழில் அமைச்சு சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் வசம் செல்­லும்.

போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ராக இருக்­கும் ஓங் யி காங், 51, புதிய சுகா­தார அமைச்­ச­ரா­கப் பதவி ஏற்­பார். அத்­து­டன், கொவிட்-19 அமைச்­சு­கள் நிலை குழு­விற்கு லாரன்ஸ் வோங்­கு­டன் சேர்ந்து இணைத் தலை­மையை ஓங் யி காங் ஏற்­பார்.

புதிய மாற்­றங்­க­ளின்படி 15 அமைச்­சு­களில் ஏழு அமைச்­சு­க­ளுக்கு புதிய தலைமை அமையும். தொடர்பு தக­வல் அமைச்­ச­ராக இருக்­கும் எஸ் ஈஸ்­வ­ரன், 58, போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஆகிறார்.

அவர் கைவி­டும் தொடர்பு தக­வல் அமைச்சை தற்­போது மனி­த­வள அமைச்­ச­ராக இருக்­கும் ஜோச­ஃபின் டியோ, 52, ஏற்­பார்.

மனி­த­வள அமைச்சு, இப்­போது அந்த அமைச்­சில் இரண்­டாம் அமைச்­ச­ராக இருக்­கும் டான் சீ லெங், 56, வசம் செல்­லும். வர்த்­தக தொழில் இரண்­டாம் அமைச்­சர் பொறுப்­பை­யும் அவர் தொடர்ந்து வகிப்­பார்.

கடந்த ஆண்டு ஜூலையில் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லுக்­குப் பிறகு புதிய அர­சாங்­கம் பொறுப்­பேற்­றது. இந்த விரி­வான அமைச்­ச­ரவை மாற்­றம் புதிய அர­சாங்­கத்தின் பதவி காலத்­தி­ன் தொடக்கப் பகுதியிலேயே செய்­யப்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­களை பிர­த­மர் லீ சியன் லூங் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் விளக்­கி­னார்.

முத­லா­வது, துணைப் பிர­த­ம­ராக இருக்­கும் ஹெங் சுவீ கியட் தம்­வ­சம் உள்ள நிதி அமைச்­சைக் கைவி­டு­வ­தால் ஏற்­படும் விளை­வு­கள்.

இரண்­டா­வது, கொவிட்-19 விவ­கா­ரத்­தைக் கையா­ளும் சுகா­தா­ரம், மனி­த­வ­ளம், வர்த்­தக தொழில் ஆகிய முன்­னணி அமைச்­சு­க­ளுக்­குத் தலைமை ஏற்­போ­ரி­டம் செய்­யப்­பட வேண்­டிய மாற்­றம்.

பொதுத் தேர்­தல் நடை­பெற்று முடிந்த வேளை­யி­லேயே இந்த மாற்­றங்­க­ளைச் செய்­வது பற்றி தாம் பரி­சீ­லித்­ததா­க­வும் ஆனால் அந்த சம­யத்­தில் கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் நாடு கடுமையான ஈடு­பட்டு இருந்­தது என்­றும் குறிப்­பிட்ட திரு லீ, தற்­போது கொவிட்-19 நில­வ­ரம் சற்று சீர­டைந்து வருவதால் அத­னைச் செய்ய முடிந்­த­தா­க­வும் தெரி­வித்­தார்.

ஏற்­கெ­னவே பல்­வேறு அமைச்சு பொறுப்­பு­கள் மூலம் தங்­க­ளது திற­மை­களை வளர்த்­துக்­கொண்டுள்ள நான்­காம் தலை­முறை அமைச்­சர்­கள் புதிய அனு­ப­வங்­க­ளைப் பெற்று அதற்­கி­ணங்க செயல்­பட வாய்ப்பு கிடைத்­துள்­ளாக பிர­த­மர் கூறி­னார்.

இந்த அமைச்­ச­ரவை மாற்­றம் பெரி­து­தான் என்­ற­போ­தி­லும் திடீ­ரென்று மேற்­கொள்­ளப்­பட்­டது அல்ல என்று அவர் தெளிவு­ப­டுத்­தி­னார்.

"தேர்­தல் நடை­பெற்று முடிந்­த­ பின்னர் நான் செய்த அமைச்­ச­ரவை மாற்­றங்­கள் ஓர் இடைக்­கால மாற்­ற­மா­கவே இடம்­பெற்­றன. தற்­போ­து­தான் முழு­மை­யான மாற்றங்­ களை நான் செய்­துள்­ளேன்," என்றார் திரு லீ.

குறு­கிய காலத்­தில் இரு அமைச்­சர்­

க­ளின் பொறுப்­பு­களை மாற்றவேண்டி இருந்­தது என்று குறிப்பிட்ட அவர், கல்வி அமைச்­சுக்­கு லாரன்ஸ் வோங்­கை­யும் போக்­கு­

வ­ரத்து அமைச்­சுக்கு ஓங் யி காங்­கை­யும் மாற்­றி­யதைக் குறிப்பிட்டார்.

"இப்­போது சீர­மைக்­கப்­பட்டு உள்­ள­தன் மூலம் புதிய அமைச்­சர்­கள் இரு­வ­ரும் தங்­க­ளது பொறுப்­பு­களில் கூடு­தல் காலம் நிலைத்­தி­ருப்­பர்," என்­றார் பிரதமர்.

நிதி அமைச்­சைக் கைவி­டு­வ­தன் மூலம் வருங்­கால பொரு­ளி­யல் மன்­றத்­திற்­குத் தலைமை ஏற்­பது உள்­ளிட்ட ஒட்­டு­மொத்த அர­சாங்க பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­களில் திரு ஹெங் சுவீ கியட் கூடுதல் கவ­னம் செலுத்த முடி­யும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார். துணைப் பிர­த­மர் பொறுப்­பைத் தொட­ரும் திரு ஹெங், பொரு­ளி­யல் கொள்கை களுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ராக வும் தொடர்ந்து இருப்­பார். பிர­த­மர் அலு­வ­ல­கத்­தில் இயங்­கும் உத்­தி­பூர்­வக் குழு­வை­யும் தேசிய ஆராய்ச்சி சம்­மே­ள­னத் தையும் அவர் கண்­கா­ணிப்­பார்.

நிதி அமைச்­சுக்கு லாரன்ஸ் வோங் நிய­மிக்­கப்­பட்­டது குறித்­தும் திரு லீ விளக்கி னார். 2016ஆம் ஆண்டு முதல் இரண்­டாம் நிதி அமைச்­ச­ராக இருந்த திரு வோங் அந்த அமைச்­சுக்கு இயல்­பா­கப் பொருந்தி இருப்­ப­தாக அவர் சொன்­னார். திரு சான் சுன் சிங் பற்றி குறிப்பிடும்போது பொரு­ளி­யல் மீட்­பில் அவர் உன்­னத பணி­யாற்­றி­ய­தா­க­ பிரதமர் கூறினார்.

 நிதி-லாரன்ஸ் வோங்

 சுகாதாரம்-ஓங் யி காங்

 கல்வி-சான் சுன் சிங்

 வர்த்தக தொழில்-கான் கிம் யோங்

 போக்குவரத்து-எஸ் ஈஸ்வரன்

 தொடர்பு தகவல்-ஜோசஃபின் டியோ

 மனிதவளம்-டான் சீ லெங்