3வது நாளாக இந்தியாவில் புதிய உச்சம்

3வது நாளாக இந்தியாவில் புதிய உச்சம்

2 mins read
7d35c26b-d007-46ff-9b76-876e62587586
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி, டெல்லி மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்படுவதற்காக வெளியே காத்திருக்கும் காட்சி. படம்: ராய்ட்டர்ஸ் -

மருத்­து­வ­ம­னை­கள் திண­றி­ய­வாறு ஆக்­ஸி­ஜன் விநி­யோ­கம் தேவை என்று கோரி வரும் நிலை­யில், மூன்­றா­வது நாளாக இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், உயி­ரி­ழந்­த­வர்­கள் எண்­ணிக்கை மீண்­டும் புதிய உச்­சத்தை எட்­டி­யுள்­ளது.

24 மணி நேரத்­தில் 346,786 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி­செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இரண்­டா­வது கிருமி அலை­யில் இந்­தியா சிக்­குண்டு தவிக்க, டெல்­லி­யில் நான்கு நிமி­டத்­திற்கு ஒரு கொவிட்-19 உயி­ரி­ழப்பு பதி­வாகி வரு­கிறது.

இந்­தி­யா­வின் வெவ்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்து அர­சாங்­கம் ராணுவ விமா­னங்­க­ளை­யும் ரயில்­க­ளை­யும் டெல்­லிக்கு அனுப்பி வைத்து வரு­கிறது.

அதன் 260 நோயா­ளி­க­ளுக்கு 90 நிமி­டங்­கள் நீடிக்­கும் அள­வுக்கு மட்­டுமே ஆக்­ஸி­ஜன் உள்­ள­தெ­னக் கூறி டெல்­லி­யின் பத்ரா மருத்­து­வ­மனை அவ­சர உத­விக்­கு­ரல் எழுப்­பி­யதை அடுத்து ஆக்­ஸி­ஜன் சரக்கு வண்டி ஒன்று அங்கு அனுப்­பப்­பட்­டது.

கடு­மை­யாக நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த 25 நோயா­ளி­கள், தாங்­கள் இருந்த ஜெய்ப்­பூர் கோல்­டன் மருத்­து­வ­ம­னைக்கு ஆக்­ஸி­ஜன் வந்து சேர்­வ­தற்­குள் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். அர­சாங்­கம் அனுப்­பிய ஆக்­ஸி­ஜன் விநி­யோ­கம், மாலை 5 மணிக்­குள் அடைய வேண்­டிய நிலை­யில், நள்­ளி­ர­வு­தான் அது வந்து சேர்ந்­த­தா­க­வும் அதற்­குள் அந்த 25 பேரும் உயிரை விட்­ட­னர் என்­றும் மருத்­து­வ­ம­னை­யின் இயக்­கு­நர் டாக்­டர் டி.கே.பாலுஜா கூறி­னார்.

இவ்­வாறு ஒவ்­வொரு நாளும் பதி­வாகி வரும் புதிய கொவிட்-19 நோயா­ளி­க­ளைச் சமா­ளிக்­கத் திண்­டா­டும் பல மருத்­து­வ­ம­னை­கள், மருத்­துவ ஆக்­ஸி­ஜன் வேண்­டும் எனக் கடந்த சில நாட்­க­ளாக கோரிக்கை விடுத்து வரு­கின்­றன.

இந்­தி­யா­வில் 24 மணி நேரத்­தில் இது­வரை இல்­லாத அள­வாக 2,624 கொவிட்-19 மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

அத்­து­டன் மொத்த தொற்று எண்­ணிக்கை 16.6 மில்­லி­ய­னைத் தொட்­டுள்­ளது. இதில் 189,544 உயி­ரி­ழப்­பு­களும் அடங்­கும்.

தொற்­றுச் சம்­ப­வங்­கள் உச்­சத்தை எட்­டக் குறைந்­தது மூன்று வாரங்­க­ளா­வது ஆகும் என்று முன்­னு­ரைக்­கும் நிபு­ணர்­கள், நாட்­டில் உண்­மை­யான உயி­ரி­ழப்பு மற்­றும் தொற்று எண்­ணிக்கை அறி­விக்­கப்­ப­டு­வ­தை­விட அதி­க­மாக இருக்­கும் என்று கூறு­கின்­ற­னர்.

இந்­தி­யா­வில் கிருமித்தொற்று பர­வு­வதைக் குறைப்­பது என்­பது 'மிகக் கடி­ன­மான பணி' என்று குறிப்­பிட்ட உலக சுகா­தார நிறு­வனத்­தின் நெருக்­க­டிப் பிரிவு இயக்­கு­நர் மைக் ராயன், மக்­க­ளி­டையே ஒன்­று­கூ­டல்­கள் இருப்பதை அர­சாங்­கம் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் கவ­னம் செலுத்­து­வது அவ­சி­யம் என்­றார்.

சிங்கப்பூர் உதவிக்கரம்

இருதரப்பு உறவு மற்றும்

பல அமைப்புநிலை முயற்சியாக நான்கு குளிர்விக்கும் கொள்கலன்களை சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலிருந்து இந்திய ஆகாயப் படை, நேற்று வான்வழியாக இந்தியாவுக்குக் கொண்டு சென்றது. இந்தியாவில் ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதற்குக் இந்த கொள்கலன்கள் பயன்படுத்தப்படும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

"கொவிட்-19க்கு எதிரான போரில் நாங்கள் இந்தியாவுடன் இணைந்திருக்கிறோம்," என்று புதுடெல்லி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள சிங்கப்பூர் தூதரகக் கிளைகள் டுவிட்டரில் பதிவிட்டிருந்தன.