பிரதமர் லீ: மியன்மார் நெருக்கடியை ஆசியான் அலட்சியப்படுத்த முடியாது

பிரதமர் லீ: மியன்மார் நெருக்கடியை ஆசியான் அலட்சியப்படுத்த முடியாது

2 mins read

வட்­டார நிலை­யில் அமைதி, பாது­காப்பு, நிலைத்­தன்மை ஆகி­யவை நில­வு­வதை ஆசி­யான் உறுப்பு நாடு­கள் உறு­தி­செய்­வ­தில் கடப்­பாடு கொண்­டுள்­ளன. மியன்­மா­ரில் நடப்­ப­தைக் கண்­டு­கொள்­ளா­மல் இருக்க முடி­யாது என்­றார் பிர­த­மர் லீ சியன் லூங்.

"நட­வ­டிக்கை ஏதும் எடுக்­கா­மல் மௌனம் சாதிப்­ப­தால் ஆசி­யா­னின் மையத்­தன்மை, நம்­ப­கத்­தன்மை, முக்­கி­யத்­து­வம் ஆகி­யவை குறைத்து மதிப்­பி­டப்­ப­ட­லாம்," என்­றார் அவர்.

ஜகார்த்­தா­வில் சக ஆசி­யான் தலை­வர்­க­ளு­டன் நேற்று சந்­தித்­துப் பேசிய திரு லீ, "நூற்­றுக்­க­ணக்­கில், ஏன் ஆயி­ரக்­க­ணக்­கில் காய­மடைந்­தோர், உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­கரித்­துக்கொண்டே போவ­தைச் செய்தி அறிக்­கை­கள் மூலம் அறிய முடி­கிறது. உணவு, மருத்­து­வப் பொருட்­கள், எரி­சக்தி ஆகி­ய­வற்­றில் தட்­டுப்­பா­டும் மோச­ம­டைந்து வரு­கிறது. மனி­த­நேய பேரி­டர் ஒன்று நம் கண் முன்னே விரி­வ­டை­கிறது," என்­றார்.

இப்­பி­ரச்­சி­னை­க­ளைக் களைய, மியன்­மா­ருக்­கும் அதன் மக்­க­ளுக்­கும் உதவ ஆசி­யான் உறுப்பு நாடு­கள் உதவ விரும்­பு­வ­தாக திரு லீ வலி­யு­றுத்­தி­னார். ஆசி­யா­னின் செயல்­பாட்டை அனைத்­து­ல­கச் சமூ­கம் உன்­னிப்­பாக கவ­னித்து வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

ஆசி­யா­னின் செயல்­முறை மற்­றும் வெளி பங்­கா­ளி­க­ளு­டன் அது செய்­து­கொண்­டுள்ள ஏற்­பா­டு­கள் யாவும் தொடர வேண்­டும் என்­றார் திரு லீ.

மியன்­மா­ரின் ராணு­வத் தலை­வர் மின் அவுங் லைய்ங் உட்­பட நேற்று நடந்த கூட்­டத்­தில், ஆறு ஆசி­யான் தலை­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர். ராணுவ ஆட்­சிக்­கவிழ்ப்பு பிப்­ர­வரி 1ஆம் தேதி­யன்று மியன்­மா­ரில் நடந்­ததை அடுத்து, அங்கு நூற்­றுக்­க­ணக்­கா­னோர் கொல்­லப்­பட்­ட­தும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­தும் குறித்­துக் கூட்­டத்­தில் பேசப்­பட்­டது.

மற்ற தலை­வர்­கள் குறிப்­பிட்ட கருத்­து­களை பிர­த­மர் லீ ஆறு முக்­கிய அம்­சங்­க­ளாக கோடிட்­டார்.

மியன்­மா­ரில் வன்­மு­றையை நிறுத்தவேண்­டும், தடுப்­புக்­கா­வ­லில் உள்ள அனைத்து அர­சி­யல்­வா­தி­களும் விடு­விக்­கப்­பட வேண்­டும், அனைத்து முக்­கிய பங்­கா­ளி­க­ளு­டனான அர­சி­யல் பேச்­சு­வார்த்தை மீண்­டும் தொடங்கவேண்­டும், ஆசி­யான் பய­னுள்ள வகை­யில் பங்­காற்ற வேண்­டும், ஆசி­யான் தூதர்­கள் வருகை புரி­யும் வசதி வேண்­டும் மற்­றும் ஆசி­யான் தலை­மை­யில் மனி­த­நேய உதவி வழங்­கும் வசதி வேண்­டும் என்­பதே திரு லீ குறிப்­பிட்ட அந்த ஆறு அம்­சங்­கள்.

நிரா­யு­த­பா­ணி­யாக இருக்­கும் பொது­மக்­க­ளுக்கு எதி­ராக எந்த சூழ்­நி­லை­யி­லும் ஆபத்து விளை­விக்­கும் வன்­மு­றை­யைப் பயன்­படுத்து­வதை சிங்­கப்­பூர் கடு­மை­யாக எதிர்க்­கிறது என்று திரு லீ தம் உரை­யில் குறிப்­பிட்­டார்.

மியன்­மார் ராணுவ அதி­கா­ரி­கள் கட்­டுப்­பாட்­டு­டன் நடந்­து­கொண்டு மேலும் வன்­முறை, ரத்­தக்­க­ளரி இல்­லா­மல் பார்த்­துக்­கொள்­ளு­மாறு அவர் கேட்­டுக்­கொண்­டார்.

கடந்த காலத்­தில் மியன்­மா­ருக்­குத் துணை­யாக ஆசி­யான் இருந்­துள்­ளது என்­றும் தொடர்ந்து இருக்­கும் என்­றும் பிர­த­மர் லீ வலி­யு­றுத்­தி­னார். மியன்­மார் மீண்­டும் பழைய நிலைக்­கும் நிலைத்­தன்­மைக்­கும் திரும்புவதற்கு நேற்­றைய கூட்­டம் குறிப்­பி­டத்­தக்க ஒரு தொடக்கம் என்­றார் திரு லீ.