அப்பர் புக்கிட் தீமாவில் லாரி விபத்து; பத்து ஆடவர்கள் மருத்துவமனையில்

அப்பர் புக்கிட் தீமாவில் லாரி விபத்து; பத்து ஆடவர்கள் மருத்துவமனையில்

1 mins read
f8bce3db-38ad-4f53-85f0-53473d1f9d4f
-

அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் ஒரு லாரி விபத்துக்குள்ளானதை அடுத்து பத்து ஆடவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.

சனிக்கிழமையன்று 'தி ரயில் மால்' கடை வீடுகளுக்கு அருகே நடந்த விபத்து குறித்த தகவல் போலிசாருக்கு காலை 7.20 மணிக்குக் கிடைத்தது.

26 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஒன்பது பயணிகளும் லாரியின் 35 வயது ஓட்டுநரும் இங் டெங் போங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இதற்கு முன்னதாக வெளிநாட்டு ஊழியர்கள் உள்ள லாரி, தீவு விரைவுச்சாலையில் வேறொரு வாகனத்துடன் மோதியதில் இருவர் மாண்டதுடன் 15 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

விசாரணை தொடர்கிறது.