நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு; 53 பணியாளர்கள் உயிரிழந்தனர்

நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு; 53 பணியாளர்கள் உயிரிழந்தனர்

1 mins read
67a3a453-7e2e-4786-b7da-7ba34f05c349
-

இந்தோனீசிய நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அங்குள்ள பணியாளர்கள் மாண்டதாகவும் அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போன கப்பலின் சிதைவுகள் பாலி தீவுக்கு அருகிலுள்ள கடல் தரையில் காணப்பட்டதாக இந்தோனீசியாவின் ராணுவத் தலைவர் ஹாடி ஜாஜந்தோவும் கடற்படைத் தலைவர் யுடோ மார்கோனாவும் தெரிவித்தனர்.

தேடல், மீட்புப் பணிகளுக்கான முயற்சிகள் சில நாட்களாக நடைபெற்று வருவதாக இந்தோனீசிய ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.

பாலிக்கு அருகே கடந்த புதன்கிழமையன்று ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த நீர்மூழ்கிக் கப்பல், நீருக்குள் சென்று தனது தொடர்பை இழந்தது.

இந்த நீர்மூழ்கிக் கப்பலைத் தேட சிங்கப்பூர், மலேசியா மற்றும் அமெரிக்காவிலிருந்து உதவிக்கரம் நீட்டப்பட்டது.

'