இந்தியாவை உலுக்கிவரும் கொரோனா

தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்து

கொவிட்-19 இரண்­டா­வது அலை நாட்டை உலுக்கி வரு­வ­தாக இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

இத­னால் மக்­கள் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளு­மா­றும் சாத்­தி­ய­முள்ள அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுக்­கும்­ப­டி­யும் பிர­த­மர் மோடி வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

இந்­தி­யா­வில் புதிய உச்­ச­மாக கடந்த 24 மணி நேரத்­தில் 349,691 பேரை கொரோனா தொற்­றி­யது; 2,767 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், வானொலி மூலம் 'மன­தின் குரல்' நிகழ்ச்சி வழி­யாக நேற்று நாட்டு மக்­க­ளி­டம் உரை­யாற்­றிய திரு மோடி, "கொரோனா முதல் அலையை வெற்­றி­க­ர­மா­கக் கட்­டுப்­ப­டுத்­தி­ய­தால் நம்­பிக்­கை­யும் மன­உ­று­தி­யும் மிக்­க­வர்­க­ளாக இருந்­தோம். ஆனால், கொரோனா இரண்­டா­வது அலை நாட்டை உலுக்கி வரு­கிறது," என்று கூறி­னார்.

அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் கொரோனா தடுப்­பூசி இல­வ­ச­மாக வழங்­கப்­பட்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், தடுப்­பூசி குறித்த வதந்­தி­க­ளுக்­குப் பொது­மக்­கள் இரை­யா­கி­விட வேண்­டாம் என்­றும் கேட்­டுக்­கொண்­டார்.

இத­னி­டையே, தலை­ந­கர் டெல்­லி­யில் கொரோ­னா­வின் வெறி­ ஆட்­டம் இன்­னும் தணி­யா­த­தால் இன்று காலை அறி­விக்­கப்­பட்டு இ­ருந்த முழு ஊர­டங்கு அடுத்த மாதம் 3ஆம் தேதி­வ­ரைக்­கும் நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

டெல்­லி­யில் கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்­வோ­ரில் 36% முதல் 37% வரை அத­னால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­தி­செய்­யப்­ப­டு­கிறது என்­றும் இதற்­கு­முன் இத்­த­கைய நிலை இருந்­த­தில்லை என்­றும் முதல்­வர் அர­விந்த் கெஜ்ரி­வால் நேற்று தெரி­வித்­தார்.

இருப்­பி­னும், சென்ற வாரம் அங்கு 28,000க்கும் மேலாக இருந்த அன்­றாட பாதிப்பு கடந்த 24 மணி நேரத்­தில் கிட்­டத்­தட்ட 24,000ஆகக் குறைந்­தது. பாதிப்பு அதி­க­மாக இருப்­ப­தால் டெல்லி மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கை­கள், மருந்­துப் பொருள்­கள் மற்­றும் ஆக்­சி­ஜ­னுக்­குப் பெரும் தட்­டுப்­பாடு நில­வு­வ­தாக என்­டி­டிவி செய்தி கூறு­கிறது.

டெல்­லிக்­கான ஆக்­சி­ஜன் ஒதுக்­கீட்டை மத்­திய அரசு 480 டன்­னில் இருந்து 490 டன்­னாக உயர்த்தி இருக்­கிறது. ஆனால், "எங்­க­ளுக்கு 700 டன் ஆக்­சி­ஜன் தேவைப்­படும் நிலை­யில் 330-335 டன் ஆக்­சி­ஜனே வந்து சேர்­கிறது," என்று கெஜ்­ரி­வால் தெரி­வித்து இருக்­கி­றார்.

அமெரிக்கா ஆதரவுக்கரம்

இத­னி­டையே, இந்­தி­யா­வில் கொரோனா பர­வல் மோச­ம­டைந்து வரு­வதை எண்ணி கவலை­அடைந்துள்ளதாகக் கூறி­யுள்ள அமெ­ரிக்கா, அந்­நாட்டு அர­சுக்­கும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­கும் விரைந்து கூடு­தல் ஆத­ரவு வழங்­கத் திட்­ட­மிட்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

"உயர்­மட்ட அள­வில் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கி­றோம். இந்­தி­யா­விற்­கான உத­வி­கள் குறித்து விரை­வில் அதிக தக­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வோம்," என்று வெள்ளை மாளி­கைப் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

இந்­தி­யா­விற்கு அதிக உத­வி­களைச் செய்ய வேண்­டிய நெருக்­கடிக்கு அமெ­ரிக்கா தள்­ளப்­பட்­டு இருப்பதாகக் கூறப்­ப­டு­கிறது.

சுகா­தார உதவி, அவ­ச­ர­கால நிவா­ர­ணப் பொருள்­கள், செயற்கை சுவா­சக் கரு­வி­கள், இந்­தி­யச் சுகா­தார அதி­கா­ரி­க­ளுக்­குப் பயிற்சி போன்ற வழி­களில் 1.4 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$1.9 பில்­லியன்) மதிப்­பி­லான உத­வி­களை அமெ­ரிக்கா ஏற்­கெ­னவே இந்­தி­யா­விற்கு வழங்கி இருப்­ப­தாக வெள்ளை மாளி­கை­யின் ஊட­கச் செய­லா­ளர் தெரி­வித்து இருக்­கிறார்.

தடுப்­பூசி தயா­ரிக்­கத் தேவை­யான மூலப்­பொ­ருள்­களை இந்­தி­யா­விற்கு ஏற்­று­மதி செய்ய தடை விதித்­த­தால் அமெ­ரிக்­கா­மீது இந்­தி­யா­வில் விமர்­ச­னங்­கள் எழுந்­தன.

'கொவி­ஷீல்ட்' தடுப்­பூ­சி­யைத் தயா­ரித்து வரும் இந்­தி­யா­வின் சீரம் நிறு­வ­னம், மூலப்­பொ­ருள்­கள் ஏற்­று­ம­திக்­கான தடையை நீக்க வேண்­டும் என அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடனை அண்­மை­யில் வலி­யு­றுத்தி இருந்­தது.

பயன்­ப­டுத்­தப்­ப­டாத தடுப்­பூ­சி­களை இந்­தி­யா­விற்கு அனுப்பி வைக்க வேண்­டும் என்று அமெ­ரிக்க எம்.பி. ராஜா கிருஷ்­ண­மூர்த்தி­யும் திரு பைட­னுக்கு வேண்­டு­கோள் விடுத்­தி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!