அமைச்சர் ஓங்: நமது அடையாளமாகத் திகழும் தாய்மொழியைத் தொடர்ந்து பேணுவது அவசியம்

அமைச்சர் ஓங்: நமது அடையாளமாகத் திகழும் தாய்மொழியைத் தொடர்ந்து பேணுவது அவசியம்

1 mins read
d02e4867-114b-4baa-b10c-e08fa904f24d
'செம்பவாங்' நூல் வெளியீட்டில் (இடமிருந்து) அமைச்சர் ஓங் யி காங், டாக்டர் அனிதா பிள்ளை, திருமதி கமலாதேவி அரவிந்தன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்து இளங்கோவன்

சிங்கப்பூரர்களைத் தங்களது கலாசா­ரத்­து­ட­னும் வர­லாற்­று­ட­னும் வேர்­க­ளு­ட­னும் இணைக்­கும் ஒரு முக்­கிய அடை­யா­ள­மாகத் தாய்மொழி விளங்­கு­கிறது என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

நமது பன்­மு­கக் கலா­சா­ரத்­தின் ஓர் அம்­சம் நமது மொழிக் கொள்கை எனக் குறிப்­பிட்ட திரு ஓங், ஆங்­கி­லம் பணி­யிட, பயன்­பாட்டு மொழி­யா­கத் திகழ்ந்­தா­லும் தனித்­து­வ­மான நமது தாய்­மொ­ழியைப் பேணிக் காக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

"தாய்­மொழி என்­பது வெறும் மொழி மட்­டும் அல்ல, அது ஒரு அன்­றாட வாழ்க்­கை­வழி. சம­யங்­க­ளை­யும் சடங்கு­க­ளை­யும் கடைப்­பி­டிப்­ப­தில் தாய்­மொழி ஒரு முக்­கிய பங்கு வகிக்­கிறது. சமூ­கத்­தின் பரி­ணாம வளர்ச்­சி­யை­யும் அது எடுத்­துக்­காட்­டு­கிறது," என்றார் அவர்.

சிங்­கப்­பூ­ரின் மூத்த எழுத்­தா­ளர்­களில் ஒரு­வ­ரான திரு­மதி கம­லா­தேவி அர­விந்­த­னின் 'செம்­ப­வாங்' எனும் தமிழ், ஆங்­கில நூல் வெளி­யீடு நேற்று மாலை தி ஆர்ட்ஸ் ஹவு­ஸில் இடம்­பெற்­றது. அமைச்­சர் ஓங்­கும் சிங்­கப்­பூருக்­கான இந்­தி­யத் தூதர் பி.கும­ர­னும் இந்­நி­கழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­னர்­களா­கப் பங்கேற்றுச் சிறப்­பித்­த­னர்.

கடந்த 40 ஆண்­டு­க­ளாக தமி­ழி­லும் மலை­யா­ளத்­தி­லும் பல சிறு­க­தை­க­ளை­யும் நாட­கங்­க­ளை­யும் எழு­தி­யி­ருக்­கும் திரு­மதி கம­லா­தே­வி­யின் முதல் நாவ­லான 'செம்­ப­வாங்'கை ஆங்­கி­லத்­தில் மொழி­பெ­யர்த்­த­வர் அவ­ரு­டைய மகள் டாக்­டர் அனி­தா­தேவி பிள்ளை. மலே­சி­யா­வி­லி­ருந்து திரு­ம­ண­மாகி சிங்­கப்­பூ­ரின் செம்­ப­வாங்­கிற்­குக் குடி­பெ­யர்ந்து, அங்கு தாம் சந்­தித்த மனி­தர்­கள், கண்ட காட்­சி­கள், எதிர்­கொண்ட அனு­ப­வங்­க­ளைக் கொண்டு வர­லாறு கலந்த கற்­ப­னைக் கதை­யாக வடித்­துள்­ளார் திரு­மதி கம­லா­தேவி.