புதிய பிஎஸ்எல்இ மதிப்பீட்டு முறை: உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல குறைந்தபட்ச புள்ளிகள் அறிவிப்பு

‘பிஎஸ்எல்இ’ எனப்படும் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுக்கான புதிய மதிப்பீட்டு முறை இவ்வாண்டு முதல் நடப்புக்கு வருகிறது. இதன்படி, தொடக்கநிலை ஆறில் பயிலும் மாணவர்கள் உயர்நிலைப் பள்ளி செல்வதற்குத் தேவையான குறைந்தபட்ச புள்ளிகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய பிஎஸ்எல்இ மதிப்பீட்டு முறைப்படி தலைசிறந்த உயர்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல விரும்பும் தொடக்கநிலை ஆறு மாணவர்கள், இனி முழு மதிப்பெண்கள் பெறத் தேவையில்லை.

கல்வி அமைச்சு இன்று (ஏப்ரல் 27) 139 உயர்நிலைப் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச புள்ளிகளை வெளியிட்டது. 2016ஆம் ஆண்டு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இப்புதிய மதிப்பீட்டு முறையின் கீழ், ஒவ்வொரு பிஎஸ்எல்இ பாடத்திற்கும் ‘அடைவுநிலைகள்’ எனப்படும் எட்டுத் தரநிலைகள் கொண்ட மதிப்பெண் தரம் அளவுமுறை அறிமுகம் காண்கிறது.

‘A*’ முதல் ‘E’ வழங்கப்படுவதற்குப் பதிலாக ஒவ்வொரு பாடத்திற்கும் ‘AL1’ முதல் ‘AL8’ வரையிலான அடைவுநிலைகள் வழங்கப்படும்.

நான்கு பாடங்களின் அடைவுநிலைகளின் மொத்தம், ஒரு மாணவரின் ஒட்டுமொத்த பிஎஸ்எல்இ மதிப்பெண்ணாகக் கருதப்படும். இதில் ஆகச் சிறந்த மதிப்பெண் நான்கு ஆகும்.

ராஃபிள்ஸ் கல்விக் கழகம், ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி போன்ற பள்ளிகளின் குறைந்தபட்ச புள்ளிகள், 4 முதல் 6 எனக் கல்வி அமைச்சின் இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி, கிரெசெண்ட் பெண்கள் பள்ளி போன்ற பிரபலமான பள்ளிகளுக்கான குறைந்தபட்ச புள்ளிகளும் 4 முதல் 10, 6 முதல் 11 என்று முறையே இருந்தன.

‘டி-ஸ்கோர்’ என்ற பழைய பிஎஸ்எல்இ மதிப்பீட்டு முறையைக் காட்டிலும் இப்புதிய ‘AL’ முறை, மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் கொடுக்காத வண்ணம் அமைந்திடும் என்று கூறப்படுகிறது.

சென்ற ஆண்டு மாணவர்களது பிஎஸ்எல்இ முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு உயர்நிலைப் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச புள்ளிகளை நிர்ணயித்ததாக கல்வி அமைச்சு இன்று இணையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!