இந்தியாவிற்குக் கைகொடுக்க சிங்கப்பூரில் நிதி திரட்டு

கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரா­கப் போராடி வரும் இந்­தி­யா­விற்கு ஆதரவு அளிக்கும் விதமாக புதிய நிவா­ரண நிதி­ தி­ரட்­டுத் திட்­டம் ஒன்று சிங்­கப்­பூ­ரில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் இந்­தி­ய வர்த்­தக, தொழிற்­ச­பை­யும் (சிக்கி) லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மரபுடைமைச் சங்­க­மும் (லிஷா) இணைந்து இந்­தத் திட்­டத்தை நேற்று தொடங்­கின.

"கொரோனா பர­வல் இந்­திய மக்­கள் மீது பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­வ­து­டன் அந்­நாட்­டில் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்­கும் வித்­திட்­டுள்­ளது. இந்­தியா தனது சுகா­தார சேவை­களில் எதிர்­கொள்­ளும் பெரும் நெருக்­க­டி­யைச் சமா­ளித்து நிர்­வ­கிக்க 'சிக்கி'யும் 'லிஷா'வும் இணைந்து நிதி திரட்டி ஆத­ர­வ­ளிக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ளன," என்று அவ்­விரு அமைப்­பு­களும் ஓர் அறிக்கை வழி­யா­கத் தெரி­வித்து இருக்­கின்­றன.

திரட்­டப்­படும் நிதி முழு­வ­தும் சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தி­டம் வழங்­கப்­படும். எந்த வழி­களில் அந்­நிதி பயன்­ப­டுத்­தப்­படும் எனும் விவ­ரம் பின்­னொரு நாளில் வெளி­யி­டப்­படும்.

இந்த 'இந்­தியா கொவிட் நிவா­ரண நிதி' மூலம் எளி­தில் பாதிக்­கப்­பட அதிக வாய்ப்­புள்­ள­வர்­க­ளுக்கு ஆத­ரவு கிடைப்­பதை உறு­தி­செய்ய 'சிக்கி'யும் 'லிஷா'வும் சிங்­கப்­பூர், இந்­திய அர­சாங்க அமைப்­பு­க­ளு­டன் இணைந்து செயல்­படும்.

உட­னடி, அவ­ச­ரத் தேவை­கள் தொடர்­பான தக­வல்­க­ளைச் சேக­ரிப்­பதற்­காக சிங்­கப்­பூ­ரி­லுள்ள இந்­தி­யத் தூத­ர­கம் மூலம் இந்­திய சுகா­தார, குடும்ப நல்­வாழ்வு அமைச்­சின் மருத்­து­வச் சாதன விநி­யோ­கப் பங்­கா­ளி­களை 'சிக்கி' அணு­கி­யி­ருக்­கிறது.

"விரைந்து பரவி வரும் கிருமித் தொற்றால் நேர­டி­யாக அதி­கம் பாதிக்கப்­பட வாய்ப்­புள்­ள­வர்­க­ளைக் காக்க உத­வும் வகை­யில் அவ­ச­ர­காலத் தேவை மீது மிகுந்த கவ­னம் செலுத்தி வரு­கி­றோம். கூடு­தல் உதவி தேவைப்­படும், முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வேண்­டிய மாநி­லங்­களிலும் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் உயிர்­காப்பு உத­வியை அதி­க­ரிக்­க­வும் கவ­னம் செலுத்­து­கி­றோம்," என்று அவ்­விரு அமைப்­பு­களும் கூறி­யுள்­ளன.

இந்­தி­யா­விற்கு அவ­ச­ர­மாக செயற்கை சுவா­சக் கரு­வி­களும் ஆக்­சி­ஜன் செறி­வூட்­டி­களும் தேவை என்­றும் அவை குறிப்­பிட்­டுள்­ளன.

"இதற்­கு­முன் இல்­லாத அள­வில் ஏற்­பட்­டுள்ள பெரும் நெருக்­கடி என்­ப­தால் இந்­தி­யா­வுடன் தோளோடு தோள் நிற்க விரும்­பு­கி­றோம். அந்­நாட்­டிற்கு உட­னடி, அவ­சர உத­வி­கள் தேவைப்­படும் என்­ப­தால் 'சிக்கி'யும் 'லிஷா'வும் முன்­னெ­டுத்­துள்ள நிதி­திரட்டு முயற்­சிக்கு ஆத­ரவு தரும்­படி ஒட்­டு­மொத்த சிங்­கப்­பூர் சமூ­கத்­திற்­கும் வேண்­டு­கோள் விடுக்­கி­றேன்," என்று 'சிக்கி' தலை­வர் டாக்­டர் டி.சந்­துரு தெரி­வித்­துள்­ளார்.

பொது­மக்­கள் 9654-1346 மற்­றும் 6222-2855 என்ற எண்­கள் வழி­யாக அல்­லது indiacovidfund@sicci.com எனும் மின்­னஞ்­சல் வழி­யாக 'சிக்கி கேர்ஸ்' அமைப்­பைத் தொடர்­பு­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!