இந்தியாவுக்கு உயிர்வாயுக் கலன்களை அனுப்பிய சிங்கப்பூர்

இந்தியாவுக்கு உயிர்வாயுக் கலன்களை அனுப்பிய சிங்கப்பூர்

1 mins read
5a82026a-d0d4-4fd0-9cfc-9a783277dfb2
-

இந்­தி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று இரண்­டாம் அலை மோச­மாகி உள்­ள­தால் அங்கு ஏற்­பட்­டுள்ள அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் பற்­றாக்­கு­றையை அடுத்து, அந்­நாட்­டிற்கு உதவி செய்­யும் வித­மாக சிங்­கப்­பூர் உயிர்­

வா­யுக் கலன்­க­ளைக் இரண்டு விமா­னங்­களில் அனுப்­பி­யுள்­ளது.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை, 256 உயிர்­

வா­யுக் கலன்­களை இரண்டு சி-130 விமா­னங்­களில் மேற்கு வங்­கா­ளத்­திற்கு அனுப்­பி­யது.

சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யி­லான இரு­நாட்டு உறவை நேற்று மறு­வுறுதி செய்த இரண்­டாம் வெளி­யு­றவு அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான், கொரோனாவுக்கு எதி­ரா­கப் போரா­டும் இந்­தி­யாவுக்கு சிங்­கப்­பூர் துணை­யாக நிற்­கும் என்று தெரி­வித்­தார்.

இரு­நாட்டு மக்­க­ளுக்­கும் அர­சாங்­கங்­

க­ளுக்­கும் இடையே உள்ள அணுக்­க­மான உற­வால் இது சாத்­தி­ய­மாகி இருப்­ப­தாக பாய லேபார் விமான நிலை­யத்­தில் விமா­னங்­களை வழி அனுப்­பி­ய­போது டாக்­டர் மாலிக்கி கூறி­னார்.

சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தி­யத் தூதர் பி. கும­ர­னி­டம் இந்த மனி­தா­பி­மான உத­வியை ஒப்­ப­டைத்­த­போது பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ருமான டாக்­டர் மாலிக்கி இவ்­வாறு கூறி­னார்.

அவ­ச­ர­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்­தத் திட்­டம், இந்­தி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே உள்ள பல அமைப்பு நிலை­யி­லான ஒத்­து­ழைப்­பும் பங்­கா­ளித்­து­வ­மும் அணுக்­க­மாக இருப்­ப­தைக் காட்­டு­வ­தாக வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது.

"நாடு, இனம் போன்ற வித்­தி­யா­சங்­களை கொவிட்-19 கிரு­மித்­தொற்று பார்ப்­ப­தில்லை. அதே­போல நாமும் ஒன்­றி­ணைந்து ஒரு­வ­ரை­யொ­ரு­வர் ஆத­ரிக்க வேண்­டும்," என்று டாக்­டர் மாலிக்கி ஓஸ்­மான் தெரி­வித்­தார்.