இந்தியாவில் கொரோனா கோரத் தாண்டவம்

இந்தியாவில் கொரோனா கோரத் தாண்டவம்

2 mins read
042aa689-2188-40db-afd1-aa860b5ba0a3
டெல்லியில் தற்காலிக தகனச் சாலைகளில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள சடலங்கள். படம்: எஏஃப்பி -

இந்­தி­யா­வில் கொரோனா கிருமி யால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை புதிய உச்­சத்தைத் தொட்டது. இது­வ­ரை­யில் உலக நாடு­களில் இல்­லாத அள­வுக்கு நாள் ஒன்­றுக்கு கொரோ­னா­வால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 360,000ஐ கடந்­துள்­ளது.

வேக­மா­கப் பர­வும் தொற்­றைக்

கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் இந்­தி­யா­வின் மத்­திய, மாநில அர­சு­கள் திணறி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், கடந்த 24 மணி நேரத்­தில் 360,960 பேருக்குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அதன்­மூ­லம் மொத்த கொரோனா பாதிப்பு கிட்­டத்­தட்ட 18 மில்­லி­ய­னா­கப் பதி­வாகி உள்­ளது. கடந்த ஒரு நாளில் மட்­டும் 3,293 பேர் உயி­ரி­ழந்­துவிட்டனர். அதன்­மூ­லம் மொத்த உயி­ரி­ழப்பு 201,187ஆக அதி­க­ரித்­துள்­ளது.

பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை தொடர்­பான அதி­கா­ர­பூர்­வத்

தர­வு­க­ளை­விட உண்­மை­யான நில­வ­ரம் மோச­மாக இருக்­கக்­கூ­டும் என்று சுகா­தா­ரத் துறை நிபு­ணர்­கள் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.

இறப்­பு­கள் அதி­க­ரிப்பு, மருத்­து­வ­ம­னை­களில் உயிர்­வாயு

தட்­டுப்­பாடு, படுக்­கை­கள்

தட்­டுப்­பாடு என்று மோச­மாகி வரும் நிலை­மையை சமா­ளிக்க முடி­யா­மல் திண­றும் இந்­தி­யா­வுக்கு அனைத்­து­லக நாடு­கள் உத­விக்­க­ரம்

நீட்­டி­யுள்­ளன.

சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா, பிரிட்­டன், பிரான்ஸ், ரஷ்யா, தாய்­லாந்து, சவூதி அரே­பியா உள்­ளிட்ட பல நாடு­கள் உயிர்­வா­யுக் கலன்­கள், மருத்­துவ உப­க­ர­ணங்­கள், தடுப்­பூ­சி­கள் ஆகி­ய­வற்றை இந்­தி­யா­வுக்கு அனுப்பி வைத்­துள்­ளன. தலை­ந­கர் புது­டெல்­லி­யில் கொரோ­னா­வால் மர­ண­ம­டைந்­தோ­ரைத் தக­னம் செய்ய பூங்­காக்­கள், வாகன நிறுத்­து­மி­டங்­கள் ஆகிய இடங்­களில் தற்­கா­லிக தக­னச் சாலை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. கொரோ­னா­வால் மாண்­டோ­ரின் உடல்­கள் அங்கு வரி­சை­யாக

எரி­யூட்­டப்­ப­டு­கின்­றன.

இதற்­கி­டைய, கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள 150 மாவட்­டங்­களில் முடக்­க­நி­லையை அமல்­ப­டுத்த நேற்று நடை­பெற்ற கூட்­டத்­தில் சுகா­தார அமைச்சு பரிந்­துரை செய்­த­து. முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டால் இந்த 150 மாவட்­டங்­களில் அத்­தி­யா­வ­சிப் பொருட்­கள் விற்­கும், சேவை­களை வழங்­கும் இடங்­கள் மட்­டுமே திறக்­கப்­பட்­டி­ருக்­கும்.

சம்­பந்­தப்­பட்ட மாநில அர­சு­

க­ளு­டன் மத்­திய அர­சாங்­கம் கலந்­து­ரை­யா­டிய பிறகு இது­கு­றித்து முடிவு எடுக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

முடக்­க­நிலை தொடர்­பான அம்­சங்­க­ளைத் தேவைக்கு ஏற்ப பிறகு மாற்­றிக்­கொள்­ள­லாம் என்­றும் இந்­தி­யா­வில் கொரோனா நெருக்

­க­டி­நிலை மிக­வும் மோச­மாக இருப்­ப­தால் முடக்­க­நி­லையை முத­லில் அமல்­ப­டுத்­து­வது முக்­கி­யம் என்று மத்­திய சுகா­தார அமைச்சு வலி­யு­றுத்­தி­யது.

"மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்ட மாவட்­டங்­களில் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த முடக்­க­நிலை அவ­சி­யம் என உறு­தி­யாக நம்­பு­கி­றோம். அதன்­படி பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்­ளோம்," என்று மத்­திய சுகா­தார அமைச்­சின் செய்­தித்­

தொ­டர்­பா­ளர் கூறி­னார்.