இந்தியா: சிறு நகர்களையும் கவ்வும் கொரோனா

இந்தியா: சிறு நகர்களையும் கவ்வும் கொரோனா

2 mins read
8662c009-ef31-4658-b65f-31c2f779c96a
இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் காசியாபாத் நகரில் சாலையோரம் ஆட்டோவில் இந்த கொவிட்-19 நோயாளி ஆக்சிஜன் உதவியுடன் சுவாசித்து வருகிறார். இந்த உயிர்வாயுக் கலனை சீக்கிய கோவில் ஒன்று அன்பளிப்பாக வழங்கியது. கொவிட்-19 காரணமாக இந்தியாவில் ஏறத்தாழ 18 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மரண எண்ணிக்கை 200,000ஐ தாண்டிவிட்டது. படம்: ஏஎஃப்பி -

இந்­தி­யா­வில் கொவிட்-19 இரண்­டா­வது அலை மேலும் மேலும் விஸ்­வ­ரூ­பம் எடுக்­கிறது. டெல்லி, மும்பை, லக்னோ, புனே போன்ற பெரும் நகர்­களை ஒரு கை பார்த்து­வரும் அந்­தக் கிருமி, இப்­போது சிறிய நகர்­கள், பேரூர்­கள், கிரா­மங்­க­ளுக்குப் படை­யெ­டுக்­கத் தொடங்கி இருப்­ப­தாக அபா­யச் சங்கு ஊதப்­பட்டு உள்­ளது.

ராஜஸ்­தான், உத்­த­ரப்­ பி­ர­தே­சம், சத்­தீஸ்­கர், உத்­ர­காண்ட், பீகார் ஆகிய ஐந்து மாநி­லங்­களில் பல கிராமப் பகுதிகளில் பெரும் நகர்­கள் அளவுக்கு அவ­ல­நிலை ஏற்படக் கூடிய வாய்ப்பு உருவாகி இருப்பதாக பல­ரை­யும் மேற்­கோள்­காட்டி பிபிசி செய்தி நிறு­வ­னம் தெரி­விக்­கிறது.

இவ்­வே­ளை­யில், ஒரு நாளில் புதி­தாக கொவிட்-19 தொற்­றி­யோரின் எண்­ணிக்கை இது­வரை இல்­லாத அள­வுக்கு 379,257 ஆக உயர்ந்­தது என்­றும் மரண எண்­ணிக்கை 3,645 ஆகி­விட்­டது என்றும் அதி­கா­ரி­கள் கூறினர்.

இந்­தியா முழு­வ­துமே இப்­போது அதி­க­மாக சிறார்­கள் கொவிட்-19 பாதிப்­புக்கு ஆளாகி வரு­கி­றார்­கள் என்­றும் அவர்­க­ளுக்­கான மருத்துவ சிகிச்­சை­கள் மேம்­பட வேண்­டும் என்­றும் மருத்­து­வர்­கள், பெற்­றோர், அதி­கா­ரி­கள் அனை­வ­ருமே ஒரு­மித்த குரல் எழுப்பியிருக்­கி­றார்­கள்.

பல மாநி­லங்­க­ளி­லும் ஆக்­சி­ஜன், மருந்­து­கள், சிகிச்சை சாத­னங்­கள், மருத்­து­வ­ம­னை­களில் இடங்­கள் எல்­லாம் பற்­றாக்­கு­றை­யா­கி­விட்­டன.

நிலைமை கட்­டுக்­க­டங்­கா­மல் போவதை உணர்ந்த இந்­திய அர­சாங்­கம் 16 ஆண்­டு­களில் முதல் தட­வை­யாக பெரிய அள­வில் தன்­கொள்­கையை மாற்­றிக்­கொண்டு வெளி­நா­டு­களில் இருந்து அன்­பளிப்­பு­களை, நன்­கொ­டை­களை, உத­வி­களை ஏற்­றுக்­கொள்­ளத் தொடங்கியுள்ளது.

சீனா­வில் இருந்­தும் ஆக்­சி­ஜன் தொடர்­பான சாத­னங்­க­ளை­யும் உயிர்­காப்பு மருந்­து­க­ளை­யும் இந்­தியா ஏற்க தயாராக இருப்பதாக சம்பந்தப்பட்ட ­தரப்புகள் கூறி­ய­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

உத­விப்­பொ­ருட்­களை ஏற்­றிக்­கொண்டு இரண்டு விமானங்­கள் ரஷ்­யா­வில் இருந்து புறப்­பட்டு இந்­தி­யா­வில் தரை­யி­றங்கி இருப்­ப­தாக இந்­தி­யா­வுக்­கான ரஷ்ய தூதர் நிக்­கோலே குடா­சேவ் கூறி­னார்.

ஆக்­சி­ஜன் சாத­னங்­கள், சுவாச சாத­னங்­கள், கண்­கா­ணிப்­புச் சாத­னங்­கள், மருந்து­கள் முத­லான பல­வும் அவற்­றில் அடங்­கும்.

இதே­போல, $100 மில்­லி­யன் மதிப்­புள்ள உத­வி­களை இந்­தி­யாவுக்கு அமெ­ரிக்கா வழங்­கத் தொடங்­கி­விட்­டது என்­றும் முத­லா­வது உதவி விமா­னம் அமெ­ரிக்­கா­வை­விட்டு புறப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தி­யா­வில் கொரோனா சூழ்­நிலை மோச­ம­டை­வ­தால் அந்த நாட்­டை­விட்டு கூடு­மா­ன­வரை விரை­வாக வெளி­யே­றி­வி­டும்­படி தன்­ குடி­மக்­க­ளுக்கு அமெ­ரிக்கா கோரிக்கை விடுத்­துள்­ளது.

இந்­தி­யா­வில் கொவிட்-19 2வது அலை அடுத்த 20 நாட்­களில் உச்சத்தைத் தொடக்­கூ­டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்­தியா வல்­லு­நர்­கள் அறிக்­கை­ கூறியது.