வருகையாளருக்கு அனுமதியில்லை எட்டுப் பேர் பாதிப்பை அடுத்து டான் டோக் செங் மருத்துவமனை முடிவு

சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக கொவிட்-19 கிருமி தொற்­றிய 35 பேரில் 16 பேர் சமூகத்­தொற்றுக்கு ஆளா­ன­வர்­கள். அவர்­களில் எட்டு பேருக்கு டான் டோக் செங் மருத்துவ மனை­யில் வேலை பார்க்­கும் ஒரு தாதி­யி­டம் இருந்து தொற்று பரவி இருக்­கக்­கூடும் என்று தெரியவந்துள்ளது.

இத­னை­ய­டுத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அந்த மருத்­து­வ­மனை வார்­டு­களில் வேலை பார்க்­கின்ற ஊழி­யர்கள் அனை­வ­ருக்­கும் கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­படும் என்று சுகா­தார அமைச்சு தெரிவித்­துள்­ளது.

அடுத்த அறி­விப்பு வரும் வரை தன்­னுடைய வார்­டு­களில் வரு­கை­யா­ளர்­கள் யாருக்­கும் அனு­மதி இல்லை என்று இந்த மருத்­து­வ­மனை அறி­வித்­துள்­ளது.

சூழ்­நி­லை­யைக் கட்­டுப்­ப­டுத்தி நோயாளி ­க­ளை­யும் ஊழி­யர்­க­ளை­யும் காப்­பாற்றத் தேவை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்டி இருக்­கிறது என்று இந்த மருத்­து­வ­மனை ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தது.

அந்த மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­றும் பிலிப்­பீன்சை சேர்ந்த 46 வயது தாதிக்கு தொற்று இருந்­தது புதன்­கி­ழமை உறு­தி­யானது. அதனை அடுத்து பாதிக்கப்பட்ட வார்டை சேர்ந்த ஊழியர்களையும் நோயாளி களையும் பரிசோதித்ததன் மூலம் மொத்தம் எட்டுப் பேருக்குத் தொற்று இருப்பது தெரிய வந்தது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் ஒரு மருத்­து­வரும் மூன்று நோயா­ளி­களும் அடங்­கு­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­தத் தாதி இரண்டு முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர். அவ­ருக்கு இரு­மல், உடல்­வலி, தொண்டை எரிச்­சல் அறி­கு­றி­கள் செவ்­வாய்க்­கி­ழமை தெரி­ய­வந்­தன.

அதை­ய­டுத்து அவர் சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர் என்று புதன்­கி­ழமை உறு­தி­யானது. அந்­தத் தாதி பணி­யாற்றும் வார்டு 9டி மூடப்­பட்டு இருக்­கிறது.

அதைச் சேர்ந்த அனைத்து நோயா­ளி­களுக்­கும் ஊழியர் களுக்கும் பரி­சோ­தனை நடத்­தப்­பட்டு அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு உள்ளனர்.

இத­னி­டையே, டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் தொற்­றுக் குழு­மம் ஏற்­பட்டு இருப்­பது கவ­லைக்கு உரி­ய­து­தான் என்­றா­லும் அள­வுக்கு அதிக கவலை தேவை­யில்லை என்று பல்­வேறு வல்­லு­நர்­க­ளும் கருத்து தெரி­வித்­து உள்­ள­னர்.

"கிரு­மித்­தொற்­றுக்கு மருத்­து­வ­ம­னை­களும் இலக்­கா­கும் என்­பதை நினை­வூட்­டு­வ­தா­கவே இந்த நில­வ­ரம் இருக்­கிறது.

"தொற்றைக் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய நட­வடிக்­கை­களை மிக­வும் தீவி­ர­மாக எடுக்க வேண்­டிய அவ­சி­யத்­தை­யும் இது நினை­வூட்­டு­கிறது," என்று அவர்கள் கூறினர்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சோ சுவீ ஹோக் பொது சுகா­தார துறை­யைச் சேர்ந்த இணைப் பேரா­சி­ரி­யர் ஜெரிமி லிம், "இன்­னும் நாம் விவே­க­மாக நடந்­து­கொள்ள வேண்­டும் என்­ப­தையே மருத்து­வ­மனை நில­வ­ரம் வலி­யு­றுத்­து­கிறது. என்­றா­லும் அள­வுக்கு அதிக அச்­சம் கொள்ளத்­தே­வை­யில்லை," என்று கூறி­னார்.

புலன்­வி­சா­ரணை முடி­வு­கள் வெளி­வரும் வரை ஊகச்­செய்­தி­களை வெளி­யி­டா­மல் இருக்­கும்­படி மக்­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

"நல்ல வேளை­யாக, அந்த மருத்­து­வ­மனை­யைச் சேர்ந்த பெரும்­பா­லான ஊழி­யர்­க­ளுக்குத் தடுப்­பூசி போடப்­பட்டு இருக்­கிறது,'' என்று அதே துறை­யைச் சேர்ந்த இணைப் பேரா­சி­ரி­யர் லியாங் கூறி­னார்.

இவ்­வே­ளை­யில், நேற்று சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் இதர ஏழு பேர் சாங்கி விமான நிலைய முனை­யம் 1ல் வேலை பார்த்த குடி­நு­ழைவுச் சோத­னைச்­சா­வடி ஆணை­ய அதி­காரி ஒரு­வரின் குடும்ப உறுப்­பி­னர்­கள் என்­றும் அவர்­கள் அனை­வ­ரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு இருப்­ப­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டது.

சமூகத்தொற்றுக்கு ஆளான 16 பேரில் இதர ஒருவரைப் பற்றிய விவரம் தெரி விக்கப்படவில்லை. நேற்று வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­களில் யாருக்­கும் புதி­தாகத் தொற்று இல்லை என்­றும் அமைச்சு அறி­வித்­தது.

புதி­தாகக் கிருமி தொற்­றி­யோ­ரில் 19 பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். தனி­மை­யில் இருக்க வேண்­டும் என்று அவர்­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, சுகா­தார அமைச்­சின் வழி­காட்டி நெறி­மு­றை­களைத் தொடர்ந்து பின்­பற்றி முழு விழிப்பு நிலை­யில் இருந்து வரு­வ­தாக இங்­குள்ள இதர மருத்­து­வ­மனை­கள் தெரி­வித்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!