நான்கு வார்டுகள் முடக்கம்

நான்கு வார்டுகள் முடக்கம்

2 mins read

டான் டோக் செங் மருத்­து­வ­மனை யில் புதிய கொவிட்-19 தொற்­றுக் குழு­மம் உரு­வெ­டுத்­ததை அடுத்து அந்த மருத்­து­வ­ம­னை­யின் நான்கு வார்­டு­கள் மூடப்­பட்­டு­விட்­டன.

அந்­தக் கிரு­மித்­தொற்று குழு­மம் தொடர்­பில் மேலும் தொற்று பர­விய சம்­ப­வங்­கள் இனி­வ­ரும் நாட்­களில் தெரி­ய­வ­ரும் சாத்­தி­யம் இருப்­ப­தாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தொற்­றுப் பர­வல் அதி­கம் என்­பது தெரி­ய­வந்­தால் இப்­போது இருப்­ப­தை­விட இன்­னும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் வாய்ப்பு உள்­ளது என்று சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் நேற்று தெரி­வித்­தார்.

கிருமி தொற்­றிய நிலை­யில் அவர்­கள் சென்று வந்­தி­ருக்­கக்­கூ­டிய அனைத்து பொது இடங்­களும் இரண்டு நாட்­கள் மூடப்­பட்டு துப்­பு­ர­வுப் பணி­கள் மேற்­கொள்­ளப்­படும்.

இதன்­மூ­லம் சமூ­கத்­தில் இது­வரை வெளியே தெரி­யாத கிரு­மித்­தொற்று நபர்­க­ளி­டம் இருந்து கிருமி பர­வு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் குறையும்.

அதோடு மட்­டு­மின்றி ஊழி­யர்­க­ளி­டம் பரி­சோ­தனை நடத்­து­வ­தற்­கும் இதன்­மூ­லம் உதவி கிடைக்­கும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் பல அமைச்­சு­களை உள்­ள­டக்­கிய சிறப்­புப் பணிக்­குழு கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் கையாண்டு வரு­கிறது. அப்பணிக்­கு­ழு­வுக்கு சுகா­தார அமைச்­ச­ர் கான் கிம் யோங் கும் கல்வி அமைச்­ச­ர் லாரன்ஸ் வோங்­கும் தலைமை தாங்­கு­கி­றார்­கள். அவர்­கள் இரு­வ­ரும் நேற்று மெய்­நி­கர் வழி­யாக செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­னர்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று அபா­யம் நீடிக்­கிறது என்­பதை அண்­மைய சம்­ப­வங்­கள் மீண்­டும் நினை­வூட்­டு­வ­தாக அமைச்­சர் கான் குறிப்­பிட்­டார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருந்­தா­லும் பாது­காப்பு நிபந்­த­னை­களை முற்­றி­லும் கடைப்­பி­டித்து சமூ­கப் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்­ளும்­படி அவர் கேட்­டுக்­கொண்­டார்.

டான் டோக் செங் மருத்­து­வ­

ம­னை­யிலிருந்து அண்­மை­யில் வீடு­தி­ரும்­பிய நோயா­ளி­க­ளைக் கண்­கா­ணித்து வரு­வ­தற்­கான பரி­சோ­த­னை­களை சுகா­தார அமைச்சு நடத்­தும்.

அதோடு மட்­டு­மின்றி, ஏப்­ரல் 18ஆம் தேதி அல்­லது அதற்­குப் பிறகு அந்த மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று வந்­த மக்­களும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வர்.

பாதிக்­கப்­பட்ட வார்­டு­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­கள், நோயா­ளி­கள், வரு­கை­யா­ளர்­கள் உள்­ளிட்ட தொற்று பாதித்­த­வர்­க­ளு­டன் அணுக்­கத் தொடர்பு கொண்­டி­ருந்த அனை­வ­ரும் தனித்து வைக்­கப்­பட்டுள்ளனர்.மருத்­து­வ­மனை கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தில் ஐந்து ஊழி­யர்­களும் எட்டு நோயா­ளி­களும் அடங்­கு­வர்.

அவர்­களில் ஊழி­யர்­கள் நால்­வ­ரும் நோயா­ளி­களில் ஒரு­வ­ரும் இரு­முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள். மற்றொரு ஒரு நோயாளி ஒரு முறை ஊசி போட்­டுக்­கொண்­ட­வர்.

டான் டோக் செங் மருத்துவமனையில் தொற்றுக் குழுமம்