நுழைவுக் கட்டுப்பாடுகள் விதிப்பு

நுழைவுக் கட்டுப்பாடுகள் விதிப்பு

2 mins read

பாலர் பள்ளிகளிலும் ஆரம்பகால இடையீட்டு மையங்களிலும் கடுமையாகும் கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள்

பாலர் பள்­ளி­க­ளி­லும் ஆரம்­ப­கால இடை­யீட்டு மையங்­க­ளி­லும் நாளை மறு­நாள் சனிக்­கி­ழ­மை­யில் இருந்து கூடு­தல் நுழை­வுக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. புதி­தா­கச் சேர்க்­கப்­பட்ட குழந்­தை­க­ளின் பெற்­றோர்­கள் தவிர மற்ற குழந்­தை­களின் பெற்­றோர்­கள் அனை­வ­ரும் அங்கு நுழைய முடி­யாது.

வெவ்­வேறு வகுப்­பு­க­ளைச் சேர்ந்த குழந்­தை­கள் ஒன்­று­க­லக்க அனு­மதி இல்லை. அத்­து­டன், குழந்­தை­க­ளுக்­கான வெளி­யி­டப் பய­ணங்­க­ளுக்­கும் வெளி­யி­டங்­களில் பெரிய குழுக்­க­ளாக இணைந்து மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் தற்­கா­லி­கத் தடை விதிக்­கப்­ப­டு­கிறது.

தேசிய அள­வி­லான கொவிட்-19 பர­வல் கட்­டுப்­பாட்டு முயற்­சி­களின் ஒரு பகு­தி­யாக இப்­படி பாலர் பள்­ளி­க­ளி­லும் ஆரம்­ப­கால இடை­யீட்டு மையங்­க­ளி­லும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் கடு­மைப்­படுத்­தப்­ப­டு­வ­தாக பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்பு நேற்று தெரி­வித்­தது.

இருப்­பி­னும், இம்­மா­தம் 17ஆம் தேதி­யில் இருந்து டிரேஸ்­டு­கெ­தர் பயன்­பாடு கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், ஏழு வய­துக்­குட்­பட்ட குழந்­தை­கள் அத­னைப் பயன்­ப­டுத்­தத் தேவை­யில்லை.

அதிக துப்­பு­ர­வுப் பணி­கள், நாள்­தோ­றும் மும்­முறை உடல்­வெப்­ப­நிலை மற்­றும் உடல்­நி­லைப் பரி­சோ­தனை உள்­ளிட்ட இப்­போ­துள்ள கொவிட்-19 விதி­மு­றை­களு­டன் புதிய கட்­டுப்­பா­டு­களும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

உரி­மம் வழங்­கு­தல் போன்ற தேவை­யான செயல்­பா­டு­களை மேற்­கொள்­வோர், புதி­தா­கச் சேர்க்­கப்­பட்ட குழந்­தை­க­ளின் பெற்­றோர்­கள் போன்­றோ­ரைத் தவிர மற்­ற­வர்­கள் நாளை மறு­நாள் முதல் இம்­மா­தம் 30ஆம் தேதி­வரை அந்­நி­லை­யங்­க­ளுக்­குள் அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள்.

பெற்­றோர்-ஆசி­ரி­யர் கருத்­த­ரங்­கு­களை இணை­யம் வழி­யாக நடத்­து­மா­றும் மாண­வர்­க­ளுக்கு மெய்­நி­கர் முறை­யில் சுற்­றுப்­ப­ய­ணங்­களை மேற்­கொள்­ளு­மா­றும் பாலர் பள்­ளி­களும் ஆரம்­ப­கால இடை­யீட்டு மையங்­களும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளன.

செறி­வூட்­டல் நட­வ­டிக்­கை­கள் போன்ற துணைத் திட்­டங்­களை வழங்­கும் ஒப்­பந்­த­தா­ரர்­கள் இந்­தக் கால­கட்­டத்­தில் அதி­க­பட்­சம் நான்கு பாலர் பள்­ளி­க­ளுக்கு மட்­டும் சேவை வழங்க அனு­ம­திக்­கப்­ப­டு­வர். மையங்­க­ளுக்கு இடையே கொரோனா பர­வும் அபா­யத்­தைக் குறைக்­கும் வகை­யில் இந்­தக் கட்­டுப்­பாடு விதிக்­கப்­ப­டு­கிறது.

ஆயி­னும், வளர்ச்சி ஆத­ர­வுத் திட்­டங்­களை வழங்­கு­வோர்க்கு விதி­வி­லக்கு அளிக்­கப்­படும்.

குழந்­தை­க­ளின், பணி­யா­ளர்­களின் நட­மாட்­டத்­தைக் கட்­டுப்­படுத்­தும் வித­மாக, குழந்­தை­கள் தங்­க­ளது வகுப்­பி­லும் சிறு குழுக்­களா­க­வும் இடம்­பெ­றும் நட­வ­டிக்­கை­களில் பங்­கு­கொள்ள மட்­டுமே குழந்­தை­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர். குழு நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்­போ­ரின் எண்­ணிக்கை எட்­டில் இருந்து ஐந்­தா­கக் குறைக்­கப்­ப­டு­கிறது.

இந்­தக் கால­கட்­டத்­தில், சிறு குழுக்­க­ளாக வெளிப்­புற நட­வ­டிக்­கை­க­ளைத் தொட­ர­லாம்.

இருப்­பி­னும், கற்­றல் பய­ணங்­கள் போன்ற பெரிய அள­வி­லான வெளிப்­புற நட­வ­டிக்­கை­க­ளைத் தள்­ளி­வைக்க வேண்­டும் என பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்பு அறி­வு­றுத்தி இருக்­கிறது.

வெளி­யி­டங்­களில் அத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்கொள்ள இப்­போது ஏதே­னும் திட்­ட­மிட்­டி­ருந்­தால் அவற்­றைத் தள்­ளி­வைக்­கும்படி அனைத்து மையங்­களும் அறி­வுறுத்­தப்­பட்­டுள்­ளன.

மேலும், பணி­யா­ளர் சந்­திப்­பு­களும் பயிற்­சி­களும் இணை­யம் வழி­யாக நடத்­தப்­பட வேண்­டும்.