சிங்கப்பூரில் புதிதாக 24 பேருக்கு சமூகத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதி முதல் இதுவே ஆக அதிகமாகப் பதிவாகியுள்ள எண்ணிக்கை ஆகும்.
இந்த 24 பேரில் 17 பேர், சாங்கி விமான நிலையக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதனுடன் அக்குழுமத்தில் உள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
சமூகத்தில் பாதிக்கப்பட்ட மற்றொருவர், முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவர். எஞ்சிய ஆறு சம்பவங்களுக்கு இடையே தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.
சமூகத்தில் பாதிக்கப்பட்டோரில் 14 பேர் ஏற்கெனவே தன்மைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக இன்று 32 கிருமிச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

