இந்தியாவில் 4,000க்கும் மேற்பட்டோர் மரணம்

இந்தியாவில் 4,000க்கும் மேற்பட்டோர் மரணம்

2 mins read

கொவிட்-19 கார­ண­மாக இந்­தி­யா­வில் நேற்று மேலும் 4,000க்கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­த­னர்.

தொடர்ந்து இரண்டு நாட்­க­ளாக 4,000க்கும் மேற்­பட்ட கொவிட்-19 மர­ணங்­களை இந்­தியா பதிவு

செய்­துள்­ளது.

கிரு­மித்­தொற்­றால் புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை நேற்று 400,000க்கும் குறை­வா­கப் பதி­வா­னது.

இருப்­பி­னும், கிரா­மங்­களில் கொவிட்-19 கிருமி பர­வு­வ­தால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை கூடு­த­லாக இருக்க சாத்­தி­யம் இருப்­ப­தாக மருத்­துவ நிபு­ணர்­கள் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.

பல கிரா­மங்­களில் கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வசதி இல்­லா­த­தால் உண்மை நில­வ­ரம் தெரி­ய­வில்லை என்று அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

புதி­தா­கப் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்­கை­யும் அதி­க­மாக இருப்­ப­தால் படுக்­கைப் பற்­றாக்­குறை, ஆக்­சி­ஜன் தோம்பு பற்­றாக்­குறை போன்­ற­வற்­றால் ஏற்­கெ­னவே திண­றிக்­கொண்­டி­ருக்­கும் இந்­திய மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குக் கூடு­தல் நெருக்­கு­தல் ஏற்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக, ஆக அதிக மக்­கள்­தொகையைக் கொண்ட மாநி­ல­மான உத்­த­ரப் பிர­தே­சத்­தில் நிலைமை மிக­வும் மோச­மாக இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கிரா­மங்­களில் உள்ள மருத்­து­வ­ ம­னை­களில் மர­ண­ம­டைந்த

தங்கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களின் உட­லுக்­குப் பக்­கத்­தில் நின்றுகொண்டு உற­வி­னர்­கள் கதறி அழும் காட்­சி­களை இந்­திய

ஊட­கங்கள் ஒளி­ப­ரப்­பி­ன.

அது­மட்­டு­மல்­லாது, தக­னச் சாலை­களில் இட­மில்­லா­த­தால் கங்கை ஆற்றி­லும் கொவிட்-19

கிரு­மித்­தொற்­றால் மாண்­டோ­ரின்

சட­லங்­கள் மிதப்­ப­தாக இந்திய ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

இதற்­கி­டையே, கொவிட்-19

கிரு­மித்­தொற்­றால் அதிக அள­வில் பாதிக்­கப்­பட்­டுள்ள மாநி­லங்­களில் மேலும் ஆறி­லி­ருந்து எட்டு வாரங்

­க­ளுக்கு முடக்­க­நி­லையை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்று இந்­திய மருத்­துவ ஆய்வு மன்­றத்­தின் தலை­வர் பல்­ராம் பார்­கவா தெரி­வித்துள்ளார்.

அப்­போ­து­தான் மள­ம­ள­வென பரவி வரும் கிரு­மி­யைக் கட்­டுக்­குள் கொண்டு வர முடி­யும் என்­றார் அவர்.

இந்­தி­யா­வில் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் 10 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்­டோ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

த­லை­ந­கர் புது­டெல்லி, மும்பை, பெங்­க­ளூரு போன்ற முக்­கிய

நக­ரங்­களும் அவற்­றில் அடங்­கும் என்­றார் அவர்.

இதற்­கி­டையே, பி1617 வகை கொவிட்-19 கிரு­மியை இந்­திய உரு­மாற்­றக் கிருமி என அழைக்க வேண்­டாம் என இந்­திய அர­சாங்­கம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

அந்த வகை கிரு­மியை அவ்­வாறு அழைப்­பது தவறு என்­றும் அது அறி­வி­யல் ரீதி­யா­கப் பொருந்­தாது என்­றும் துல்­லி­ய­மற்­றது என்­றும் உலக சுகா­தார நிறுவ­னம் தெரி­வித்­தி­ருப்­பதை இந்­திய

அர­சாங்­கம் சுட்­டி­யது.

"அந்த உரு­மா­றிய கிரு­மியை முதன்­மு­த­லாக அடை­யா­ளம் கண்டு உலக நாடு­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­த­தால் அது இந்­திய உரு­மாற்­றக் கிருமி என்­றா­கி­வி­டாது. பி1617 வகை கிரு­மிக்கு அவ்­வாறு பெயர் சொல்லி அழைப்­பது நியா­ய­மற்­றது," என்று இந்­திய சுகா­தார அமைச்சு அதி­ருப்தி தெரி­வித்­துள்­ளது.

பி1617 வகை கொவிட்-19 கிருமி மிக எளி­தில் பர­வக்­கூ­டி­யது என்று மருத்­துவ நிபு­ணர்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

அவ்­வகை கிருமி தற்­போது பல நாடு­க­ளுக்­குப் பர­வி­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.