வேலையிடப் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள அக்கறை

வேலையிடப் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள அக்கறை

1 mins read
62fff5b3-624e-4e4c-8554-45d667b9a4bf
-

கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக கட்டுமானம் போன்ற துறைகளில் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலையிடங்களில் ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் புறக்கணிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதத்துக்கும் மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வேலையிடங்களில் கிட்டத்தட்ட 3,300 பேர் காயமடைந்ததாக மனிதவள அமைச்சு கூறியது.

கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட 3,100 பேர் காயமடைந்தனர். கடந்த மாதம் வேலையிடங்களில் காயமடைந்தோர் தொடர்பான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை 3,200க்கும் அதிகமான வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை 14 வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன. சாலை விபத்துகளில் மாண்ட ஊழியர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.