20 ஆண்டுகள் காணாத மிக மோசமான புயல்; அச்சத்தில் குஜராத்

20 ஆண்டுகள் காணாத மிக மோசமான புயல்; அச்சத்தில் குஜராத்

2 mins read
5a4cad0e-4039-4bdd-aabd-f43087559ab9
குஜராத்தை நோக்கி விரையும் 'டவ்தே' புயலால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தங்கள் படகுகளைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல மீனவர்கள் படாதபாடுபட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவின் குஜராத் மாநிலத்தை நோக்கி மிக மோசமான 'டவ்தே' புயல் விரைவதாக இந்திய வானிலை மையம் நேற்று அபாய சங்கு ஒலித்தது.

வானிலை மையத்தின் முன்னுரைப்பின்படி அது நேற்றிரவு கரையைக் கடந்திருக்கும்.

இதை மிக மோசமான புயல் என்று மையம் வகைப்படுத்தியுள்ளது.

மணிக்கு 210 கிலோமீட்டர் வேகம் வரை புயல் வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'டவ்தே' புயல் இது­வரை கேரளா, கர்­நா­டகா, கோவா ஆகிய கட­லோர மாநி­லங்­க­ளைப் பதம் பார்த்து பெருத்த சேதத்தை ஏற்­

ப­டுத்­தி­யுள்ளதாக இந்­திய

அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

புய­லின் சீற்­றம் கார­ண­மாக அந்த மாநி­லங்­களில் குறைந்­தது 12 பேர் மாண்­டு­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

"கடந்த 20 ஆண்­டு­களில் இதுவே குஜ­ராத்­தைத் தாக்­கும் ஆக மோச­மான புயல். இதை 1998ஆம் ஆண்­டில் குஜ­ராத்தை உலுக்­கிய புய­லு­டன் ஒப்­பி­ட­லாம். அது மிகக் கடு­மை­யான சேதத்தை ஏற்­ப­டுத்­தி­யது," என்று ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் குஜ­ராத் மாநி­லத்­தின் வரு­வாய்த் துறை செய­லா­ளர் பங்­கச் குமார் தெரி­வித்­தார்.

1998ஆம் ஆண்டில் ஏற்பட்ட புயலின் காரணமாக குஜராத்தில் குறைந்தது 4,000 பேர் மாண்டனர்.

ஏற்­கெ­னவே மள­ம­ள­வென அதி­க­ரித்து வரும் கொவிட்-19 பாதிப்­பைச் சமா­ளிக்க முடி­யா­மல் திண­றிக்­கொண்­டி­ருக்­கும் குஜ­ராத்­துக்கு கூடு­தல் நெருக்­கு­தலை இந்­தப் புயல் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதற்­கி­டையே, முன்­னெச்­

ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக

கட­லோ­ரப் பகு­தி­களில் வசிக்­கும் கிட்­டத்­தட்ட 150,000 பேரை அவர்­க­ளது வீடு­க­ளி­லி­ருந்து குஜ­ராத் அதி­கா­ரி­கள் வெளி­யேற்றி பாது­காப்­பான இடங்களில் தங்க வைத்­தி­ருப்­ப­தாக இந்­திய ஊடகம் தெரி­வித்­தது. ஏறத்­தாழ 50

மீட்­புப் பணி­யா­ளர் குழுக்­கள் தயார்­நி­லை­யில் இருப்­ப­தா­க­வும் குஜ­ராத் அரசு கூறி­யது.

அது­மட்­டு­மல்­லா­மல், குஜ­ராத்­தில் உள்ள துறை­மு­கங்­களும் பிர­தான விமான நிலை­ய­மும் மூடப்­பட்­டுள்­ளன.

புயலை எதிர்­கொள்ள தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­டு­வ­தாக குஜ­ராத்­ முத­ல­மைச்­சர் விஜய் ருபானி உறுதி அளித்­துள்­ளார்.