12 முதல் 15 வயதினருக்கு ‘ஃபைசர்’ தடுப்பூசி போட ஒப்புதல்

சிங்­கப்­பூ­ரில் 12 முதல் 15 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்கு 'ஃபைசர்-பயோ­என்­டெக்' நிறு­வ­னத்­தின் கொவிட்-19 தடுப்­பூசி வழங்க ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

கொவிட்-19க்கு எதி­ரான அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரான அவர், நேற்று நடை­பெற்ற மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் இத­னைத் தெரி­வித்­தார்.

இக்­கு­றிப்­பிட்ட வய­தி­ன­ருக்கு 'ஃபைசர்-பயோ­என்­டெக்' தடுப்­பூசி போடு­வது குறித்து சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் அதன் ஒப்­பு­தலை அளித்­துள்ள நிலை­யில், கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் தொடர்­பி­லான நிபு­ணர் குழு­வும் இந்த முடி­வுக்கு ஆத­ர­வ­ளித்­துள்­ள­தாக அமைச்­சர் ஓங் கூறி­னார்.

"இந்த வயது பிரி­வி­ன­ருக்கு அதி­கச் செயல்­தி­றன், பாது­காப்பு தர­வல்­ல­தாக ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூசி உள்­ளது என இரு சாரா­ரும் (நிபு­ணர் குழு மற்­றும் ஆணை­யம்) மதிப்­பிட்­டுள்­ள­னர்," என்­றார் திரு ஓங். இதற்­கி­டையே, 12 முதல் 15 வயது மாண­வர்­களுக்­கான தடுப்­பூ­சித் திட்­டம் தொடர்­பில் கல்வி அமைச்­சும் சுகா­தார அமைச்­சும் இணைந்து செயல்­படும் என்­றும் விரை­வில் விவ­ரங்­கள் அறி­விக்­கப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

கடந்த சில நாட்­க­ளாக கொவிட்-19 கிரு­மி­யின் பிடி­யில் சிக்­கிய பள்ளி மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. கடந்த ஆண்டை ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­கம் என்று சுகா­தார அமைச்­சின் மருத்­து­வச் சேவைத் துறை இயக்­கு­நர் கென்­னத் மாக் பகிர்ந்து­கொண்­டார். பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளைப் பின்­பற்­று­வ­தில் சிறு­வர்­க­ளி­டம் குறைந்த அளவு விழிப்பு­நி­லை­யும் கட்­டொ­ழுங்­கும் இருப்­ப­தா­க­வும் சுட்­டி­னார்.

இக்­கு­றிப்­பிட்ட வய­தி­ன­ருக்­கான தடுப்­பூ­சித் திட்­டம், முன்­னு­ரிமை பெறு­வது குறித்து பின்­னா­ளில் முடி­வெ­டுக்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

தடுப்­பூ­சித் திட்­டம் தொடர்­பில் சிங்­கப்­பூர் பல்­வேறு தடங்­க­ளைக் கொண்­டுள்­ள­தாக கூறிய நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங், அதில் ஒன்று கல்­வித் துறை சார்ந்த ஆசி­ரி­யர்­கள், பணி­யா­ளர்­கள், மாண­வர்­கள் ஆகி­யோர் மீது கவ­னம் செலுத்­து­வது என்று குறிப்­பிட்­டார்.

இருப்­பி­னும், தங்­க­ளின் பிள்­ளை­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வ­தால் பாது­காப்பு குறித்து பெற்­றோர்­க­ளுக்­குக் கவலை ஏற்­ப­ட­லாம் என்று கூறிய பேரா­சி­ரி­யர் மாக், பெரி­ய­வர்­க­ளுக்­குக் கிடைக்­கும் அதே செயல்­தி­றன், பாது­காப்பு 12 முதல் 15 வய­துக்கு உட்­பட்­ட­வர்­க­ளுக்­கும் கிடைக்­கும் என்று உறு­தி­ய­ளித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!